Tamilstar
Health

மாதுளை ஜூஸ் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்..

Benefits of drinking pomegranate juice

மாதுளை ஜூஸ் குடிப்பதன் மூலம் நமக்கு என்னென்ன நன்மைகள் என்று தெளிவாக பார்க்கலாம்.

பொதுவாக நாம் உண்ணும் உணவில் அதிகமாக பழங்களை சேர்த்துக் கொள்வது வழக்கமான ஒன்று. அப்படி முக்கியமாகவும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் பழங்களில் ஒன்று மாதுளை.

இதில் ஆண்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளது. மாதுளை பழத்தை சாப்பிடுவதற்கும் ஜூஸாக குடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தையும் அதில் உள்ள ஆரோக்கிய நன்மையையும் பற்றி பார்க்கலாம்.

மாதுளை பழத்தில் ஜூஸ் குடிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக வைக்க இது பெருமளவில் உதவுகிறது. மேலும் மாதுளை சாற்றில் உள்ள அந்தோசயனின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

நம் உடலில் நீர்ச்சத்து கம்மியாக இருக்கும் நிலையில் முடிந்தவரை மாதுளம் பழத்தை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பது மட்டுமில்லாமல் நீரேற்றம் ஆகவும் இருக்கும்.

மேலும் வயதானவர்களுக்கு மாதுளை ஒரு வரப்பிரசாதம் என்றுமே சொல்லலாம். ஏனெனில் மாதுளம் ஜூசை குடிக்கும்போது நினைவாற்றல் மேம்படுவது மட்டுமில்லாமல் புத்துணர்ச்சியாக இருப்பதையும் உணர முடியும்.

இப்படி நம் உடலில் பலவிதமான ஆரோக்கியத்தை தரும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு நலமாக வாழ வழி செய்வோம்.