சுரைகாய் சூப் அதிகம் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நீர் சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்று சுரைகாய். இதில் கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் புரதம் இரும்பு சத்து நிறைந்து உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
சுரைகாய் சூப் செய்ய முதலில் குக்கரில் சுரைக்காய் மற்றும் தக்காளி சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸியில் கிரீம் பதத்தில் அரைத்து எடுத்து நெய் மற்றும் சீரகம் தாளித்து சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து இறக்க வேண்டும்.
சுவையான சூப் ரெடி.
சுரைகாய் சூப் சாப்பிடும் போது நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும். மேலும் சரும பொலிவையும் கொடுக்கும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சுரைக்காயை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.