முருங்கை இலையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
முருங்கை மரத்தில் பூ, காய், கீரை என அனைத்துமே உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கின்றது என அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக முருங்கைக் கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, இ, சி, கால்சியம், புரதம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும் ,உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.