Health

தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுவதால் என்ன பயன்கள் தெரியுமா?

நெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும். உலர் பழத்தைச் சாப்பிட்டு வர கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.

நெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். புழுக்களை அழிக்கும். நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.

நெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரையைக் குறைக்கும். நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.

பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும். நெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.

உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும். நெல்லிப் பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் மாறும்.

நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து, நரை முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணிநேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது.

admin

Recent Posts

கலர்ஃபுல் உடையல் கியூட் போஸ் கொடுக்கும் எதிர்நீச்சல் ஈஸ்வரி, போட்டோஸ் இதோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி என்ற…

11 hours ago

OTT யில் மாஸ் காட்ட போகும் ஸ்டார், வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக நடிகராக பயணித்து தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாப்புலராகி அதன் பிறகு படங்களில்…

11 hours ago

தனுஷின் ஒரே பாடலில் பணியாற்றிய அனைத்து பிரபலங்களுக்கும் விவாகரத்து, வைரலாகும் ஷாக் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் விவாகரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்…

11 hours ago

வெள்ளரி நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெள்ளரி நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். கோடை காலம் தொடங்கி விட்டதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது…

12 hours ago