Tamilstar
Health

வெள்ளரிக்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்..!

Benefits of eating cucumber

வெள்ளரிக்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிப்பது வெள்ளரிக்காய். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாக இருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து நற்பலன்களை ஏற்படுத்துகிறது.

கோடை காலத்தில் உடலை நீரேற்றம் ஆக வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. இதில் 95 சதவீதம் தண்ணீர் இருப்பதால் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது.

இது மட்டும் இல்லாமல் இது புற்றுநோய் செல்களில் இருந்து எதிர்த்து போராடவும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் வெள்ளரிக்காய் மிகவும் பயன்படுகிறது.

மெக்னீசியம் பொட்டாசியம் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலுக்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கும் வெள்ளரிக்காய் ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்க மற்றும் கூந்தல் வளரவும் நல்லது.

எனவே ஆரோக்கியம் நிறைந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு உடல் ஆரோக்கியமாக வாழலாம்.