Tamilstar
Health

கிவி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..

Benefits of eating kiwi fruit ..

கிவி பழம் நம் உடலுக்கு நன்மையை கொடுக்கிறது. அதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவாக நாம் பழ வகைகளை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு நன்மையைத் தரக்கூடும். இதிலும் கிவி பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலில் ரத்தத்தின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இதுமட்டுமில்லாமல் சருமத்தில் மினுமினுப்பு மற்றும் இளம் தோற்றத்தினை கொடுக்க இந்தப்பழம் பெருமளவில் உதவுகிறது.

இந்தப்பழத்தை காலை மற்றும் மதியத்தில் பழமாகவும் ஜூஸாக சாப்பிட்டால் செல்கள் புத்துணர்ச்சி யாகி தோல் பளபளப்பாகும்.

மேலும் கிவி பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நம் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளான மாலைக்கண்நோய் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கிவி பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இதய நோய் உள்ளவர்கள் இந்தப் பழம் சாப்பிட்டால் நரம்புகள் இரத்தம் கட்டி கொள்ளாமல் பாதுகாக்கும். இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இதயம் பிரச்சனை உள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்கும்.

கிவி பழம் செரிமான பிரச்சனையை தீர்க்க பெருமளவில் உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் உணவை செரிமானம் செய்து ஜீரண அமிலங்களும் உற்பத்தியைத் தூண்டும்.