பாசி பருப்பு நம் உணவில் சேர்த்துக் கொண்டால் என்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.
பாசிப்பருப்பு நம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது நமக்கு ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் மன அழுத்தம் மற்றும் மன மனம் இருக்கும் உடையவர்கள் பாசிப்பருப்பு தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாசிப்பருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
பாசிப்பருப்பில் இருக்கும் நார்ச்சத்து ஜீரண மண்டலத்தை வலிமையாக்கி செரிமான பிரச்சனையை நீக்குகிறது. வயிற்றில் இருக்கும் சூட்டு பிரச்சனையும் குறைக்க உதவுகிறது.
முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு பாசிப்பருப்பு உதவுகிறது. எடை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்பவர்கள் பாசிப்பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் இதை சாப்பிடும் போது அடிக்கடி பசி எடுப்பதை தடுக்கும். எனவே உடல் எடை குறைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.