Tamilstar
Health

காலையில் முள்ளங்கி சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

Benefits of eating radish in the morning

காலையில் முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று முள்ளங்கி. இதில் என்னற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதனால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

மூலநோய் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலம் மூல நோயிலிருந்து விடுபடுவது மட்டுமில்லாமல் அமிலத்தன்மை பிரச்சனையை போக்க உதவுகிறது.

இது மட்டும் இல்லாமல் ரத்தத்தை சுத்தப்படுத்துவதும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடுவது மட்டுமில்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையை போகவும் உதவுகிறது.

எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த முள்ளங்கியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.