தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கோடை காலம் வந்தாலே நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது வழக்கமான ஒன்று. அப்படி நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் முக்கியமான ஒன்று தர்பூசணி. இது பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டது என அனைவருக்கும் தெரியும். இது மட்டும் இல்லாமல் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வதில் இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக கோடை காலத்தில் இந்த பழம் சாப்பிடும் போது ரத்த நாளங்களின் விரிவாக்கத்தை எளிதாக உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
எனவே கோடை காலங்களில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.