Tamilstar
Health

குங்குமப் பூ மரு‌த்துவ குண‌ங்க‌ள்!

குங்குமப் பூ என்பதை பலரும் வாங்கிப் பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அது என்னவென்று பலருக்கும் தெரியாது. காஷ்மீரில் விளையும் ஒரு வகைப் பூக்களின் தண்டுதான் இந்த குங்குமப் பூ.

இது செம்மஞ்சள் நிறம் உடையது. உண்மையான குங்குமப் பூ ஒன்றிரண்டை நீரில் போட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

மேலும் இத‌ற்கு ப‌‌ல்வேறு மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன. கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் குங்குமப் பூவிற்கு உள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருவுற்ற பெண்கள் குங்குமப் பூவை 5 ஆம் மாதம் முதல் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாயின் இரத்தம் சுத்தமடைவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துகளும் கிடைக்கும்.