உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது உடல் பருமனால் தான்.உடல் பருமன் வந்தாலே உடலில் பல்வேறு வகையான பிரச்சனை வரக்கூடும்.உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சியும், டயட்டுகளும் செய்வது வழக்கம்.ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
கிரீன் டீ இல் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வரலாம்.இது உடல் எடையை குறைக்க உதவும்.
மேலும் இஞ்சி டீ குடிப்பது நல்லது.இது மட்டுமில்லாமல் மஞ்சள் கலந்த பால் குடிப்பது மிகவும் அவசியமான ஒன்று.
இலவங்கபட்டை மற்றும் தேன் கலந்த பானம் குடித்தால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமாக உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.