Tamilstar
Health

வெள்ளரிக்காயில் இருக்கும் எக்கச்சக்க நன்மைகள்..

benifits of cucumber

வெள்ளரிக்காயில் இருக்கும் நன்மைகளை குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் கோடை காலத்திற்கு மிக சிறந்த ஒன்று. கோடை காலங்களில் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். வெள்ளரிக்காய் சாப்பிடுவது நம் உடலுக்கு பல்வேறு வகைகளில் நன்மையை அளிக்கிறது.

வெள்ளரிக்காய் நாம் தொடர்ந்து சாப்பிட்டால் எலும்பு வலுவடைய மிகவும் உதவும்.

ஏனெனில் இதில் வைட்டமின் கே அதிகம் இருப்பதால் எலும்பிற்கு வலு சேர்க்க பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் முடி நன்றாக வளரவும் சருமம் பளபளப்பாகவும் சருமத்தில் உள்ள கறைகளை நீக்கவும் வெள்ளரிக்காய் பெருமளவில் உதவுகிறது.

மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடுவது மற்றும் அஜீரண பிரச்சனைகளிலும் நம்மை பாதுகாக்க உதவுகிறது.

உடல் எடை குறைப்பதில் வெள்ளரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் வெள்ளரிக்காயில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் மிகக் குறைவாகவும் இருப்பதால் எடையை அதிகரிக்காமல் தடுத்து உடல் எடை குறைய உதவுகிறது.

இது மட்டும் இல்லாமல் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வெள்ளரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது இதில் அதிகமான அளவு பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.