வெங்காயச் சாறு குடிப்பதால் நமக்கு கிடைக்கும் பயன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் வெங்காயம் சேர்ப்பது என்பது அனைவரும் அறிந்தது. வெங்காயத்தில் நார்ச்சத்து, கால்சியம், சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
ஊட்டச்சத்து நிறைந்த வெங்காயத்தை நாம் ஜூஸ் செய்து குடித்து வந்தால் மிகவும் ஆரோக்கியத்தையும் நன்மையும் கொடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு வெங்காயச்சாறு சிறந்த மருந்தாக இருக்கும். ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பலவீனமாக உணர்வார்கள். அது மட்டும் இல்லாமல் அடிக்கடி நோய்களும் வரக்கூடும். அப்படி இருக்க வெங்காய சாற்றை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்தப்பட்டு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும்.
மேலும் வெங்காயச் சாறு உடல் எடை குறைக்க மிகவும் உதவும்.
வெங்காயச்சாறு கலோரிகள் குறைவாக இருப்பது மட்டுமில்லாமல் கொழுப்பு இல்லாததால் செரிமானத்தை மேம்படுத்தி வளர்ச்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது.
வெங்காயச் சாறு நம் வெறும் வயிற்றில் குடிக்கும் போது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கும் நன்மை அளிக்கிறது.