Tamilstar
Health

உருளைக்கிழங்கு ஜூஸில் இருக்கும் நன்மைகள்.

benifits of potato juice

உருளைக்கிழங்கு ஜூஸில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

நம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு ஜுஸ் நம் உடலில் பல்வேறு பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.

தோலின் நிறத்தை மாற்றுவதில் உருளைக்கிழங்கு சாறு மிகவும் உதவுகிறது.

இதில் வைட்டமின் சி, பி, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு, தாமிரம் போன்ற எண்ணற்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இது மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் உடல் பருமன் பிரச்சனைகளை சமாளிப்பதற்கு இந்தச் சாறு மிகவும் பலன் தரும். ஒரு டம்ளர் உருளைக்கிழங்கு சாறு நம் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி கொடுக்கும். மேலும் வயிற்றுப் பிரச்சனைகளை நீக்கவும் பயன்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் தினமும் உருளைக்கிழங்கு சாறு குடிக்கும் போது பித்தப்பையில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி சுத்தமாக்க உதவுகிறது.

மேலும் கல்லீரல் பிரச்சனையும் நீக்க உதவுகிறது. குறிப்பாக ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் அவதிப்படுபவர்களுக்கு உருளைக்கிழங்கு ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் மன அழுத்தம் மனச்சோர்வு பிரச்சனையையும் குறைக்க இந்த ஜூஸ் பெருமளவில் உதவுகிறது.