Tamilstar
Health

மருத்துவ குணம் நிறைந்த சப்போட்டா..

benifits of Sapota fruit

சப்போட்டா பழத்தில் உள்ள நன்மைகளும் மருத்துவ குணங்களும் பற்றி பார்க்கலாம்.

பொதுவாக நாம் அதிகமாக உண்ணும் பழங்களில் ஒன்று சப்போட்டா பழம். இந்த சப்போட்டா பழத்தில் இருக்கும் சத்துக்கள் நம் உடலுக்கு பெருமளவில் நன்மையை அளிக்கிறது.

சப்போட்டா பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

மேலும் புற்று நோய் உள்ளவர்கள் இந்தப் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. சப்போட்டாவில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு வலிமையை சேர்ப்பது மட்டுமில்லாமல் சுக்ரோஸ், பிரக்டோஸ் என இயற்கை சர்க்கரை சப்போட்டாவில் உள்ளதால் இது நம் உடலுக்கு சக்தியை அளிக்கிறது.

இந்தப் பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பாலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

முடி வளர்வதில் சப்போட்டா பெரும் பங்கு வகிக்கிறது. சப்போட்டா பழம் தலைமுடி நீளமாக வளரவும் முடி மென்மையாக இருக்கவும், உதவுகிறது. மூளையின் நரம்புகளை அமைதி படுத்தவும் சப்போட்டா பழத்தில் உள்ள இரும்புச்சத்து மூளைக்கு போதுமான ஆக்சிஜனை வழங்க முக்கிய பங்கு வகிக்கிறது.

இதுபோன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளை நீக்க சப்போட்டா மிகவும் முக்கிய பங்கு அளிக்கிறது. எனவே நம் அன்றாட உண்ணும் உணவுகளில் ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து உண்பதன் மூலம் மகிழ்ச்சியாக வாழலாம்.