டொராண்டோ தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் மக்களின் மனதை வென்ற திரைப்படமாக கன்னி மாடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கன்னி மாடம்.
சமூக அக்கறையுள்ள கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது.
தற்போது இப்படம் டரொண்டோ பிலிம் பெஸ்டிவல் திருவிழாவில் தேர்வு செய்யப்பட்டு மக்கள் ஓட்டுகளின் மூலமாக சிறந்த திரைப்படமாக தேர்வாகி விருது பெற்றுள்ளது.
இதனால் ரசிகர்கள் பலரும் இப்படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மற்றும் மக்களின் பாராட்டு மழையால் படக்குழு உற்சாகம் அடைந்துள்ளது.