நடிகர் பரத் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதன்பின் செல்லமே திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதனை தொடர்ந்து எம்டன் மகன், பட்டியல், வெயில் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
மேலும் சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் சரியாக போகாத நிலையில், கடைசியாக வெளியான காளிதாஸ் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
தற்போது இவர் நடுவன், 8 மற்றும் சல்மான் கானுடன் ராதே திரைப்படத்திலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் நடிகர் பரத் பொது இடத்தில் ரசிகர்களால் சூழப்பட்டு தொந்தரவுக்கு உள்ளன வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ரசிகர் ஒரு நடிகர் பரத்திற்கு முத்தம் கொடுப்பது, பதிலுக்கு அவரும் முத்தம் கொடுப்பது என புகைப்படம் எடுத்துள்ளார்.
அதன்பின் அவருடன் இருந்த அனைவரும் இதேபோல் புகைப்படம் எடுக்க கேட்டுள்ளனர், இதனை தவிர்த்துவிட்டு நடிகர் பரத் அங்கிருந்து சென்றுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Chinnathalapathy Bharath harrassed. pic.twitter.com/BpUo2YcakL
— Vishnu Aravind (@Tractor9699) August 3, 2020