பரத் கதாநாயகனாக நடித்துள்ள ஒரு திகில் படத்துக்கு, ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் அவருக்கு ஜோடியாக விவியாசன்த் நடித்து இருக்கிறார். படத்தை தயாரிக்கும் அனூப் காலித், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுரேஷ் கதை எழுத, சுனிஷ்குமார் இயக்கி இருக்கிறார். இவர் ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக இருந்தவர்.
திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம், தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள். ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டரில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.