Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோவிலுக்கு வந்த கண்ணம்மா.அதிர்ச்சியில் ஷர்மிளா.இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட்.

bharathi kannamma 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாரதி குடும்பம் திருமண தோஷம் நீங்க பரிகாரம் செய்ய கோவிலுக்கு வந்துள்ள நிலையில் கண்ணம்மா தனது அம்மாவுக்காக பரிகாரம் செய்ய அதே கோவிலுக்கு வந்துள்ளார்.

ஷர்மிளா மற்றும் விஜய் என இருவரும் சாமி கும்பிட போக கண்ணம்மா லைனில் வருமாறு அவர்களிடம் பிரச்சனை செய்கிறாள். அடுத்து கோவில் குளத்தின் அருகே பாரதி ஒரு பக்கம் கண்ணம்மா ஒரு பக்கம் என பரிகாரம் செய்கின்றனர்.

பாரதி பரிகார பூஜை முடித்து விட்டு மாலையை குளத்தில் போட்டு விட்டு போக கண்ணம்மா குளத்தில் மூழ்கி எந்திரிக்கும் போது அவளது கழுத்தில் வந்து சேருகிறது. இதை பார்த்த ஷர்மிளா அதிர்ச்சி அடைகிறார். கோவிலில் கண்ணம்மாவுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகிரும் என சொல்கின்றனர்.

அதன் பிறகு கண்ணம்மா வீட்டுக்கு வந்து அம்மா பாக்கியாவுக்கு பிரசாதம் கொடுத்து உனக்காக தொடர்ந்து 13 நாள் விரதம் இருக்க போவதாக சொல்கிறாள்‌. ஷண்முக வாத்தியார் கண்ணம்மாவை எல்லாத்துக்கும் காரணம் நீ தான் என் திட்டுகிறார்.

இந்த பக்கம் ஷர்மிளா பாரதிக்கு ஜோடியாக அந்த கண்ணம்மா வந்துருவா போல என விஜயிடம் புலம்பி வெண்பாவுக்கு உடனடியாக போன் போட்டு இந்தியா வர சொல்ல வெண்பா ஏர்போர்ட்ல இருக்கும் விஷயத்தை சொல்கிறார்.

நாளைக்கு சென்னை வந்துருவ, இனிமே என் ஆட்டம் தான் என சொல்ல ஷர்மிளா மற்றும் விஜய் சந்தோஷம் அடைகிறார்கள். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma 2 serial episode update
bharathi kannamma 2 serial episode update