தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜய் மற்றும் வெண்பா என இருவரும் சேர்ந்து கண்ணம்மா குடிக்கும் தண்ணீரில் தூக்க மாத்திரையை கலந்து விடுகின்றனர்.
அதன் பிறகு கிளாசுக்கு போன கண்ணம்மா தன்னை மீறி தூங்கி விட அப்போது இரண்டு மாணவர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் தாக்கி ஒருவனுக்கு மண்டையில் ரத்தம் வருகிறது. இந்த விஷயம் அறிந்து வந்த கண்ணம்மா இவ்வளவு பிரச்சனை நடந்துட்டு இருக்கு உங்க கிளாஸ் டீச்சர் யாரு என கேட்டு உள்ளே பார்க்க கண்ணம்மா தூங்கியபடி இருக்க அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு செல்வம் கண்ணம்மாவை எழுப்ப கண்ணம்மா தனக்கே தெரியாமல் தூங்கிவிட்டதாக சொல்ல சௌந்தர்யா தன்னை குரூமில் வந்து பார்க்குமாறு சொல்லி அங்கிருந்து நகர்கிறார். பிறகு கண்ணம்மா செய்தது பெரிய தவறு என சௌந்தர்யா எச்சரிக்க செல்வம் இந்த ஒரு முறை மன்னித்து விடலாம் என பேச வெண்பா இதுபோல செய்தால் நாளைக்கு இதே தவறை வேறு யாராவது செய்வார்கள் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என சௌந்தர்யாவை ஏற்றி விட சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு இனி இந்த ஸ்கூலில் வேலை கிடையாது, அவள் செய்த வேலைக்கு கணக்கு பார்த்து சம்பளம் கொடுத்து அனுப்புங்கள் என சொல்லி சாட் கொடுத்த கண்ணீருடன் கண்ணம்மா அங்கிருந்து வெளியேறுகிறார்.
பிறகு மதுவும் கண்ணம்மாவும் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க கண்ணம்மா கண்ணீருடன் இருக்க அங்கு வரும் வெண்பா இருவரையும் நக்கல் அடித்து விட்டு செல்ல பிறகு பாரதி அங்கு வருகிறார். மது நடந்த விஷயத்தை சொல்ல கண்ணம்மா கண்ணீருடன் எழுந்து வீட்டுக்கு வந்து விட பாரதி என்ன செய்யலாம் என யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் பாரதி வீட்டில் சௌந்தர்யாவிடம் கண்ணம்மாவிற்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும் என பேச ஷர்மிளா, வெண்பா உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைகின்றனர்.
