Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்ணம்மாவிடம் சொல்லி வருத்தப்படும் பாரதி. வெண்பா எடுத்த முடிவு. இன்றைய பாரதிகண்ணம்மா 2 எபிசோட்

bharathi kannamma 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாரதி கண்ணம்மாவிடம் தனக்கு அம்மை போட்டிருந்த நேரத்தில் தனது அப்பா தனக்காக பிச்சை எடுத்து அதை உண்டியலில் போட அம்மை குணம் ஆன விஷயத்தை சொல்கிறார். பிறகு கொஞ்ச நாளில் தனது அப்பாவை யாரோ கொலை செய்து விட்டார்கள் அப்போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை அப்பாவோட பாசம் அறிகிற வயசு வரும்போது அவர் இல்லாம போயிட்டாரு என சொல்லி வருத்தப்படுகிறார்.

அவருடைய பிரிவை தாங்க முடியாமல் தான் நான் தவறான வழியில் போய் இன்னைக்கு இப்படி சிகரெட் குடிப்பழக்கம் என மாறிவிட்டேன் என சொல்ல கண்ணம்மா இந்த நேரத்துல ஒன்னு சொல்றேனே தப்பா எடுத்துக்காத அப்பா போனதால இப்படி தவறான வழிக்கு போன நீ ஏன் உனக்காக வாழ்கிற அம்மாவுக்காகவும் தங்கச்சிக்காகவும் இந்த கெட்ட பழக்கங்களை விடக்கூடாது என சொல்கிறார்.

உடனே பாரதி எனக்கு யார் அட்வைஸ் பண்ணாலும் பிடிக்காது. ஆனால் நீ என்ன ஏதோ விதத்தில் கண்ட்ரோல் பண்ற என சொல்கிறார். பிறகு பாரதியை கண்ணம்மா மசாலா கம்பெனிக்கு கிளம்பச் சொல்லி அனுப்பி வைக்க பாரதி அடம்பிடித்து அங்கிருந்து நகர இதையெல்லாம் பார்க்க வெண்பா இதற்கு முடிவு கட்டணும் என திட்டம் ஒன்றை திட்டுகிறார்.

உடனே சண்முக வாத்தியாரை வரவைத்து உங்க வீட்ல கஷ்டம் உங்க மனைவி ரொம்ப முடியாம இருக்காங்க. சாந்திக்கு கல்யாணம் ஆகல நகை வீடு எல்லாம் அடமானத்தில் கிடக்கு அதனால உங்க பொண்ணு கண்ணம்மாவை வச்சு பெரிய வீட்டு பையனை வளைச்சு போடலாம் என்று நினைக்கிறீர்களா? கண்ணம்மா பாரதி பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கா. இதெல்லாம் நல்லா இல்ல என சொல்ல சண்முக வாத்தியார் நான் அவள கண்டிக்கிறேன் என கூறுகிறார். பிறகு வெண்பா எங்க கொளுத்தி போட்டா எப்படி வெடிக்குமோ அங்க கொளுத்தி போடுவேன் என சந்தோஷப்படுகிறார்.

அடுத்து பாரதி வீட்டில் இருக்கும்போது அவரை மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார் வர பாரதி பெண்ணின் போட்டோவை பார்த்து கொண்டிருக்க வெண்பா இது உனக்கு செட்டாகாது வேண்டாம்னு சொல்லு என மெசேஜ் அனுப்ப அதைப் பார்த்து பாரதி இந்த சம்பந்தம் வேண்டாம் எனக்கு என்னமோ இது செட் ஆகும்னு தோணல என்ன சொல்ல வெண்பா சந்தோஷப்படுகிறார்.

பிறகு பாரதி சௌந்தர்யாவிடம் இந்த சம்பந்தம் வேண்டாம் அம்மா, என் உள் மனசு, ஏதோ இது சரி வராதுன்னு சொல்லுது என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma 2 serial episode update
bharathi kannamma 2 serial episode update