தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கனமாவை ரவுடிகள் கத்தியால் குத்த அவள் சித்ராவிடம் நீயாவது போய் எங்க அம்மாவை பாரு அவங்கள காப்பாத்து என சொல்லிவிட்டு உயிரை விட பிறகு போலீசார் இந்த பொண்ணுக்கு நீ என்ன வேண்டும் அவள் பெயர் சித்ரா என மாற்றி சொல்கிறார். மேலும் தன்னுடைய பெயர் கண்ணம்மா அன்னவாசல் சொந்த ஊர். சிதம்பரம் வாத்தியாரின் மகள் என சொல்கிறார்.
இந்த பக்கம் பாரதிக்கு பெண் பார்க்க சௌந்தர்யா குடும்பம் அனைவரும் தயாராகி காத்துக் கொண்டிருக்க சௌந்தர்யாவின் அண்ணன் வந்து போனாலும் எதுவும் நடக்காது என பாரதி குடி போதையில் சண்டை போட்ட வீடியோவை காட்ட சௌந்தர்யா அதிர்ச்சடைய சர்மிளா அதை பார்த்து சந்தோஷப்படுகிறார்.
பிறகு இது பற்றி பாரதியிடம் கேட்க சௌந்தர்யா என்ன எப்போதும் மாத்திக்க முடியாது இதெல்லாம் தெரிந்து என்னை திருமணம் செய்து கொள்ள ஏதாவது பெண் சம்மதம் சொன்னால் சொல்லுங்கள் போய் பார்க்கலாம் என சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
அதன் பிறகு ரவுடிகள் ஜெயிலில் தனத்தை சந்தித்து சித்ராவை கொன்று விட்டதாக சொல்ல அவள் சந்தோஷப்படுகிறார். பேப்பரிலும் சித்ரா கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகிவிட்டது.
இந்த பக்கம் சித்ரா கண்ணம்மாவாக தனது பெயரை மாற்றிக் கொண்டு அன்னவாசல் வந்து ஆட்டோவில் ஏறி ஊருக்கு செல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.