தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா வீட்டில் சாந்தியை பெண் பார்க்க வர பாட்டி சொன்னது போல கண்ணம்மாவை கூடவே நிற்க வைக்க அவர்கள் சாந்தியை பிடித்திருப்பதாக சொல்லி கிளம்பி செல்கின்றனர்.
பிறகு பாக்கியா எதுக்கு கண்ணம்மாவை சாந்தியோட நிக்க சொன்னீங்க இப்பயாவது காரணம் சொல்லுங்க என கேட்க கண்ணம்மா கலரு கம்மில, அதனால தான் அவள நிக்க சொன்னேன். இப்போ நான் சொன்ன மாதிரியே சாந்தியை பிடிச்சு இருக்குன்னு சொல்லிட்டாங்க பாத்தியா என சொல்ல பாக்யாவும் சாந்தியும் அந்த பாட்டியை திட்டி அனுப்பி வைக்கின்றனர்.
அந்த பாட்டு பேசியதை கேட்ட கண்ணம்மா கண் கலங்க சாந்தி அவளுக்கு ஆறுதல் சொல்கிறார். பிறகு கண்ணம்மா மதுவிடம் நடந்த விஷயங்களை சொல்ல அவளை நீ அழகே இது இந்த ஊரோட கலரு உன்னை யாரு அழகு இல்லன்னு சொன்னது என சொல்லி சமாதானம் செய்கிறார்.
அடுத்ததாக பாரதி ஒரு இடத்தில் இருக்க அங்கு வரும் விஜயிடம் ஏன்டா லேட்டு என கேட்க கோவிலுக்கு போயிருந்ததாக சொல்ல சொல்லி இருந்தா நானும் வந்து இருப்பேன் என பாரதி சொல்கிறார். அந்த கோவிலுக்கு நீ வர முடியாது என சொல்ல ஏன் என கேட்க அப்பாவோட ஆயுளுக்காக வேண்டிக்கிற கோவில் அது உனக்குத்தான் அப்பா இல்லையே என சொல்ல பாரதி வருத்தப்படுகிறார். விஜய் திரும்பத் திரும்ப பாரதியின் அப்பாவை நினைவு படுத்தி பாரதியை குடிக்க வைக்கிறார்.
பிறகு பாரதி வீட்டில் பெண் வீட்டார் வந்திருக்க அங்கு பாரதி குடித்து விட்டு வர அவர்கள் இந்த மாப்பிள்ளை வேண்டாம் எனக்கு வெள்ளிக்கிழமை சௌந்தர்யா அவமானப்பட்டு கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோடு முடிவடைகிறது.
