தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பல வருடங்களாக இழுத்தடித்து வந்த டி என் ஏ டெஸ்ட்டை பாரதி எடுத்துள்ளார்.
அதற்கான முடிவுக்காக அவர் காத்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் இந்த கழுத்தில் தாலி கட்ட சொல்லி டிராக்டர் செய்து வருகிறார். விரைவில் இந்த சீரியலின் கிளைமேக்ஸ் எதிர்பார்க்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக அகிலன் என்ற வேடத்தில் நடித்து வரும் சுகேஷ்க்கு நிஜ வாழ்க்கையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவருடைய திருமண கோலப்பு புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.