தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2. இந்த இரண்டு சீரியல்களும் மெகா சங்கமும் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய எபிசோடில் சாமியாரை பார்க்க போயிருந்த பார்வதியிடம் சாமியார் தவறாக நடந்ததால் பளாரென அறைந்த பார்வதி தன்னை அழைத்துச் சென்ற தோழியையும் அறைந்து விட்டு வீட்டுக்கு வந்து சந்தியா மற்றும் கண்ணம்மாவிடம் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டார். அந்த சாமியார் இவ்வளவு கேவலமானவனா என்பதை அறிந்து கொண்ட சந்தியா, கண்ணம்மா இருவரும் அவருடைய முகத்திரையை கிழிக்க வேண்டும் நாம் அதற்காக போராட வேண்டும் என முடிவு செய்ய பார்வதி நானும் இதில் ஒரு பங்காக இருக்க வேண்டும் என கூறுகிறார். மூன்று பேரும் இணைந்து சாமியாரின் முகத்திரையை கிழிக்க சபதம் எடுக்கின்றனர்.
அதன் பிறகு ஊர் பொதுமக்களின் சிலர் சாமியாரை பார்க்க பரபரப்பாக ஓடிச் சென்ற ஊருக்கு தண்ணீர் சப்ளை செய்யும் கிணற்றில் கர்ப்பிணி பசு ஒன்று இறந்து விட்டது தெய்வ குத்தம் என ஊர் மக்கள் சொல்கிறார்கள் என சொல்ல சாமியார் அந்த அகிலாண்டேஸ்வரி கோபத்தில் இருக்கிறாள். இதற்கு ஒரே ஒரு பரிகாரம் தான் இருக்கு அதை அந்த சிவகாமி குடும்பம் தான் செய்ய வேண்டும். இரவு 12 மணிக்கு அவங்க வீட்டு மூன்று பெண்கள் ஈர துணியை கட்டிக் கொண்டு கையில் தீச்சட்டி எடுத்து ஊரை மூன்று முறை வலம் வர வேண்டும் என சொல்ல கண்டிப்பாக செய்ய வைக்கிறோம் என்று வாக்கு கொடுத்துவிட்டு வருகின்றனர்.
பிறகு ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து சிவகாமி வீட்டு முன்பு கூச்சலிடம் சரவணன் பாரதி கண்ணம்மா மற்றும் சந்தியா செந்தில் ரவி உள்ளிட்டோர் வெளியே வருகின்றனர். நடந்தது சொல்லி சாமியார் அதற்கான பரிகாரத்தை நீங்க தான் செய்ய வேண்டும் என சொன்னதாக சொல்ல முதலில் செய்ய முடியாது என சிவகாமி குடும்பத்தினர் கூறுகின்றனர்.
பிறகு ரவி இந்த பரிகாரத்தை நாங்கள் செய்கிறோம் என வாக்கு கொடுத்து சந்தியாவிடம் இதை மறுக்காமல் செய்ய என வேண்டுகோள் வைக்க பிறகு சரி என ஒப்புக்கொள்கின்றனர். ரவி சிவகாமி பார்வதி மற்றும் சந்தியா மூவரும் இந்த பரிகாரத்தை செய்வார்கள் என சொல்ல பாரதி அம்மா வேண்டாம் அவருக்கு பதிலாக கண்ணம்மா செய்யட்டும் என கூறுகிறார்.
இன்னைக்கு ராத்திரி 12 மணிக்கு அம்மன் கோவிலில் இருந்து பரிகாரம் தொடங்கும் என கூறிவிட்டு ஊர் மக்கள் கலைந்து செல்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.