தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி இணைந்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகின்றன. இன்றைய எபிசோடில் ஹேமா தன்னுடைய அம்மாவை காட்ட சொல்லி பாரதியிடம் கேட்க கண்டிப்பாக பிறந்தநாளுக்கு அம்மாவை காட்டுறேன் என பாரதி சத்தியம் செய்து கொடுக்கிறார்.
அதன் பிறகு ஹேமா உற்சாகமடைகிறார். பின்னர் பாஸ்கர் பைக்கை வைத்துக்கொண்டு பார்வதிக்காக காத்திருக்க பார்வதி வந்ததும் பைக்கில் உட்கார்ந்து என சொல்ல அம்மா ஹாஸ்பிடல்ல இருக்காங்க இந்த நேரத்துல வெளியே போகணுமா? நான் வரல என பார்வதி கூறுகிறார். ஒரு வழியாக பார்வதியை சமாதானப்படுத்தி பைக்கில் கூட்டிச் செல்கிறார் பாஸ்கர். இருவரும் ஜாலியாக சென்னை சுற்றி பார்க்கின்றனர்.
இந்த பக்கம் சௌந்தர்யா கண்ணம்மாவை வீட்டில் டிராப் செய்ய வந்தபோது உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என மேலே அழைத்துச் செல்கிறார். சௌந்தர்யா நீங்க தென்காசிக்கு போய் வந்ததும் நல்லது நடக்கும் என நினைத்தேன் அதே மாதிரி நல்லது நடக்கப் போகிறது. பாரதி ஹேமாவுக்கு அம்மாவை காட்டுறேனு சத்தியம் பண்ணி இருக்கான். அவன் அம்மா என்று உன்னை தான் காட்டுவான் அதுக்கப்புறம் எல்லா பிரச்சனையும் தீர்ந்ததும் என சௌந்தர்யா சொல்ல எனக்கு அதில் தான் சந்தேகம் என கண்ணம்மா கூறுகிறார்.
அவர் ஹேமாவை ஏமாத்த மாட்டார் ஆனால் என்னை தான் அம்மாவை காட்டுவார்னு சொல்ல முடியாது. வேற யாரையாவது கூப்பிட்டு வந்து காட்டினாலும் காட்டலாம் அப்படி மட்டும் நடந்தால் கொலையே நடக்கும் என கண்ணம்மா கூறுகிறார். அப்படி ஏதாவது பண்ணா நான் பொறுமையா பார்த்துகிட்டு இருக்க மாட்டேன். ஏற்கனவே என் பொண்ண உங்களுக்காக தான் உங்ககிட்ட விட்டு வச்சிருக்கேன். இனிமேல் என்னால பொறுமையா இருக்க முடியாது என கூறுகிறார்.
இந்தப் பக்கம் பாஸ்கரன் பார்வதியின் ஜாலியாக வெளியே சென்று இருக்க காபி ஷாப் சென்று காபி குடிக்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.