தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சீரியலில் முதலில் அகிலன் படத்தில் நடித்து வந்தவர் பட வாய்ப்பு காரணமாக விலகிக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து சில மாதங்கள் கழித்து நாயகியாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார். இப்படி அடுத்தடுத்து இரண்டு பேர் சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது ஆளாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி மனோகர் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். இதனால் சீரியல் இயக்குனரே கடுப்பாகி பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இனி அஞ்சலி கதாபாத்திரத்தில் கண்மணிக்கு பதிலாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடித்து வரும் அருள் ஜோதி என்ற நடிகையை நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இவர் நடித்துள்ள எபிசோடுகள் வெகு விரைவில் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.
View this post on Instagram