Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல சீரியலில் Entry கொடுக்கும் பாரதிகண்ணம்மா அருண். வைரலாகும் ஃபோட்டோ

Bharathi Kannamma Arun in Eeramana Rojave 2 Serial

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முதல் சீசன் கடந்த சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பாரதி கண்ணம்மா சீசன் 2 ஒளிபரப்பாக உள்ளது.

பாரதி கண்ணம்மா இரண்டாம் பாகத்தில் நாயகனாக ரோஜா சீரியல் புகழ் சிப்பு சூரியன் நடிக்கிறார். கண்ணம்மாவாக வினுஷா தேவி தொடர்ந்து நடிக்கிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் முதல் சீசன் நாயகனான அருண் பிரசாத் தற்போது ஈரமான ரோஜா சீசன் 2 சீரியலில் நடிக்க வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

ஈரமான ரோஜாவே சீசன் 2 நடிகர் நடிகைகளுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் விரைவில் அவரை இந்த சீரியலில் பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Bharathi Kannamma Arun in Eeramana Rojave 2 Serial

Bharathi Kannamma Arun in Eeramana Rojave 2 Serial