தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ரோஷினி ஹரிப்ரியன் கண்ணம்மா ஆக நடித்து வந்தார். வெள்ளித்திரை வாய்ப்புகளில் கவனம் செலுத்துவதற்காக அவர் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். இதனையடுத்து தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.
டிக்டாக் மூலமாக பிரபலமான இவர் பேட்டி ஒன்றில் தான் கருப்பாக இருப்பதன் காரணத்தினாலும் ஒல்லியாக உயரமாக இருப்பதாலும் பல கேலி கிண்டல்களுக்கு உள்ளானதாக கூறியுள்ளார். பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க வந்தபோது கூட பலர் கிண்டல் செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் இந்தப் பேட்டியில் தொலைபேசி வாயிலாக பேசிய பாரதி வினுஷா தேவி சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறார் என கூறியுள்ளார். சீரியல் மட்டும் இல்லாமல் அவர் ஐடி துறையில் வேலை செய்துகொண்டு எப்போதும் பிசியாக இருந்து வருகிறார் என பாரதி கூறியுள்ளார்.
