தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்னமும் பாரதி கண்ணம்மாவை நம்பாமல் ஜவ்வு போல இழுத்து வருவது ரசிகர்களுக்கு கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
பாரதியும் கண்ணம்மாவும் வெண்பாவை பழி தீர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் பழையபடி பாரதி கண்ணம்மாவை சந்தேகப்பட்டு வெளியே அனுப்பிவிடுகிறார். இதனால் மீண்டும் கதை ஆரம்பத்திலிருந்து ஒளிபரப்பாவது போல ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டது.
இந்த சீரியலை இயக்குபவர் பிரவீன் பென்னட் என்பவர் தான். இவருடைய மனைவி பெயர் சாய் ப்ரமோதிதா. இவரின் சின்னத்திரை சீரியல் நடிகை தான். ஆமாம் இவர் கனா காணும் காலங்கள் சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
