தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் அகிலன் SPR.
பாரதி கண்ணம்மா சீரியல் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு அடுத்ததாக அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகராக இவர் வலம் வந்தார். கடந்த வருடம் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதை அடுத்து விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரும் அகிலனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
