தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் அர்ச்சனா. இவருடைய நடிப்புக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டிவி டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் இவருக்கு சிறந்த காமெடி வில்லி விருது வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் அர்ச்சனா விருது வாங்கும் போது அவரை டாக்டர், டி என் ஏ, பாரதி என்ற பெயரை வைத்து எல்லாம் கிண்டலடித்தனர்.
இதன் காரணமாக இவரும் பாரதிகண்ணம்மா அருண் பிரசாத்தும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் எழுந்துள்ளன. ஆனால் உண்மை என்ன என்பதை அவர்கள் இருவருக்கு தான் தெரியும்.