தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து இருந்த நிலையில் நேற்றைய எபிசோடில் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டனர்.
தாமரை சொன்ன வார்த்தைகளால் யோசித்துப் பார்த்த கண்ணம்மா பாரதியுடன் சேர்ந்து வாழ்வதுதான் நல்லது என முடிவெடுத்து பாரதியை ஏற்றுக்கொண்டார். இதனால் நேற்றுடன் சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர்.
ஆனால் கடைசியில் தொடரும் என போட்டு ட்விஸ்ட் வைத்துள்ளனர். இதனால் இன்னும் என்னடா பண்ண காத்துகிட்டு இருக்கீங்க என்ன ரசிகர்கள் வெறுப்புடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
