Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதிக்கு அமோக வரவேற்பு கொடுத்த வெண்பா… என்ன செய்யப்போகிறார் கண்ணம்மா.. பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்

Bharathi Kannamma serial Episode Update 02.02.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி வெண்பா வீட்டிற்கு செல்லப் போவதாக சொன்னதை அடுத்து வீட்டில் உள்ள அனைவரும் ஒரே பதற்றத்தோடு இருக்கின்றனர். பிறகு பாரதி துணிமணி எல்லாம் எடுத்துக்கொண்டே ஹேமாவை கூட்டிக்கொண்டு மேலே இருந்து கீழே இறங்குகிறார். அம்மாவுக்கு முத்தம் கொடுத்து அவரை காரில் காத்திருக்க சொல்கிறார் சௌந்தர்யா.

பிறகு பாரதியிடம் நீ முடிவே பண்ணிட்டியா எனக் கேட்க நீங்கதான சொன்னீங்க ஆறு மாசத்துக்கு இந்த வீட்டில் இருக்க கூடாதுன்னு நான் எங்க இருந்தா உங்களுக்கு என்ன என்ன பாரதி கேட்க நான் அந்த ஆறு மாசத்துக்கு அம்மாவுடன் சேர்ந்து வாழணும் னு சொன்னேன் இப்படி யாரோ வீட்டில் போய் இருக்க சொல்லல என கூறுகிறார். அது ஒன்னும் யாரோ வீடு இல்ல என் பிரண்டு வெண்பா வீடு என பாரதி கூறுகிறார்.

பிறகு எல்லோரும் பாரதிக்கு அறிவுரை சொல்ல அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளாத பாரதி அங்கிருந்து கிளம்புகிறார். இந்த பக்கம் என்ன செய்வது என தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார் கண்ணம்மா. அப்போது வந்த வாய்தா வடிவுக்கரசி அவர் பங்குக்கு ஒரு நாலஞ்சு அட்வைஸ் ஐடியாவை சொல்ல அது எல்லாம் செட் ஆகாது என கண்ணம்மா கூறுகிறார். கடவுள் என் பக்கம் இருக்காரு கண்டிப்பா பாரதி போன வேகத்தில் அங்கிருந்து திரும்பி வந்துவிடுவார் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் வெண்பா பாரதியின் வருகையால் வீட்டை டெக்கரேட் செய்து வைக்கிறார். இந்த ஆறு மாதத்தில் பாரதியுடன் லிவிங் டுகெதர் லைஃப் வாழப் போவதாக வெண்பா கூறுகிறார். சாந்தியிடம் ஹேமாவை எங்க பக்கத்தில் வராமல் பார்த்துக்கோ. ‌ பாரதியை நான் பார்த்துக்கிறேன். இந்த ஆறு மாசம் சந்தர்ப்பத்தை ஆயுள்காலமாக மாத்தணும் என வெண்பா கூறுகிறார்.

இந்த நேரத்தில் சரியாக பாரதி வந்து காலிங் பெல் அடிக்க ஆரத்தி எடுத்து அவரை வலது கால் எடுத்து உள்ளே வைத்து வரச் சொல்லி வரவேற்கிறார். ஹேமாவிடம் உனக்கு நிறைய டாய்ஸ் வாங்கி வச்சிருக்கேன் எனக் கூறுகிறார். தேங்க்யூ டாக்டர் ஆன்ட்டி என அம்மா சொன்னதும் இனி என்ன டாக்டர் ஆண்டின் எல்லாம் சொல்லக்கூடாது சமையல் செய்ற உங்கள எப்படி சொல்லுவ எனக் கேட்க சமையல் அம்மானு சொல்லுவேன், அதே மாதிரி இனி என்ன நீ டாக்டர் அம்மானு தான் கூப்பிடனும் ஓகே என கூறுகிறார்.

சமையல் அம்மா சமையல் அம்மா டாக்டரம்மா என சொல்லி பார்த்துவிட்டு ஹேமா டாக்டர் அம்மா நீ நல்லாவே இல்லை என கூறுகிறார். அதுவும் இல்லாம இப்ப தான் நீங்க டாக்டர் இல்லையே நீங்கதான் டாக்டரா வேலை பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்கல, நீங்க ஜெயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்திங்க நான் டிவியில் பார்த்தேன். அப்ப நீங்க டாக்டர் கூட இல்ல, வெறும் ஆன்ட்டி வெறும் ஆன்ட்டி என சொல்லி வெறுப்பு ஏற்றுகிறார் ஹேமா. பாரதி ஹேமாவை அமைதிப்படுத்துகிறார்.

பிறகு வெண்பா சாந்தியிடம் ஹேமாவை கூட்டிட்டு போய் டாய்ஸ் எல்லாம் காட்டு என கூறுகிறார். அதன் பின்னர் பாரதி ஹேமா பேசியது எல்லாம் மனசுல வச்சிக்காத சாரி என கூறுகிறார். அவ சின்ன பொண்ணு தானே விடு என வெண்பா சொல்கிறார். ஆனால் ஹேமா சொல்லி அசிங்கப்படுத்தியதை நினைத்து கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 Bharathi Kannamma serial Episode Update 02.02.22

Bharathi Kannamma serial Episode Update 02.02.22