தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பா திடீரென ஹேமா மீது அக்கறை இருப்பது போல நடந்து கொள்வதைப் பார்த்து கண்ணம்மா சந்தேகப்படுகிறார். இது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு அப்போது வந்த வாய்தா வடிவுகரசி இடம் இது குறித்து கூறுகிறார். வெண்பாவிடம் சென்று இதைப்பத்தி கேட்கலாம் என கூறுகிறார். ஆனால் கண்ணம்மா அதெல்லாம் வேண்டாம் தேவையில்லாத பிரச்சனை ஆகும் என கூறி விடுகிறார்.
இந்த பக்கம் ஸ்கூலில் இருந்து நேராக வீட்டிற்கு வந்த அவன் தன்னுடைய பாட்டியிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என கூறுகிறார். என்ன விஷயம் எனக் கேட்க நான் ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி அப்பாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போயிருந்தேன். அவர்கிட்ட இன்னொரு கல்யாணம் பண்ணிக்கங்க என சொன்னேன். அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டா இது கிடைப்பாங்க அப்பாவை பார்த்துக்க ஒருத்தர் இருப்பாங்க. அப்பாவை பார்த்து கட்டு இவ்வளவு பேர் இருக்குமே என சொன்ன அப்பா ரொம்ப கஷ்டப்படுறாரு என ஹேமா கூறுகிறார். அதற்கு பாரதி என்று சொன்னால் எனக் கேட்க அப்பா எதுவும் சொல்லாமல் என்னை அனுப்பி வைத்து விட்டார் என கூறுகிறார். இதைக் கேட்டு சௌந்தர்யா அதிர்ச்சி அடைய அகிலன் சின்ன பொண்ணு ஏதோ பேசுகிறார் மறந்து விடுவார் என கூறுகிறார். ஹேமா இல்ல நான் கண்டிப்பா அப்பாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பேன் என சொல்லி விட்டு உள்ளே சென்று விடுகிறார்.
பாரதியை யாரும் சரியா பார்க்கிறது இல்லை என்ற எண்ணம் அவளோட மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கு என சௌந்தர்யா வருத்தப்படுகிறார். இந்த பக்கம் லட்சுமி ஸ்கூல் முடிந்து காத்துக்கொண்டிருக்கிறேன் அப்போது வந்த குமார் அண்ணா வா போகலாம் என சொல்ல லட்சுமி நான் அம்மாவிடம் சொல்லி விட்டு எனக்கு ஒரு வேலை இருக்கு நான் அதை முடிச்சிட்டு வரேன் என சொல்லி அவரை அனுப்பி வைத்து விடுகிறார். பிறகு அவருடைய தோழியின் அம்மா போலீஸ் அதிகாரி ஒருவர் ஸ்கூலுக்கு வருகிறார். அவரிடம் சென்று எங்க அப்பா அதைக் கண்டுபிடித்து தரணும் என கேட்கிறார்.
உங்க அப்பா எங்க போனாரு என்ன பிரச்சனை என அவர் விசாரிக்க நான் இதுவரை அவரை பார்த்ததே இல்லை என சொல்கிறார். எங்க அம்மா கிட்ட கேட்டா எதுவும் சொல்ல மாட்டாங்க என கூறுகிறார். சரி நான் கண்டுபிடிச்ச தருகிறேன் உங்க அப்பாவோட போன் நம்பர் போட்டோ இல்லனா ரேஷன் கார்டு ஏதாவது இருந்தா கொண்டுவா என கூறுகிறார்.
லட்சுமி சரி என சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி நடந்து வந்து கொண்டிருக்கிறார். அந்த வழியாக பாரதி ஹேமாவுடன் காரில் வருகிறார் எதிர்பாராதவிதமாக லஷ்மியின் மீது லேசாக மோதி அவர் கீழே விழுந்து விடுகிறார். பதறியடித்து ஓடிவந்த பார்வதி லட்சுமி தூக்கி எதுவும் ஆகல என விசாரித்து விட்டு அவரை நானே வீட்டில் விட்டு விடுகிறேன் என காரில் அழைத்துச் செல்கிறார்.
அப்போது லட்சுமி போலீஸ் ஒருவரை சந்தித்து அப்பாவை கண்டுபிடித்த தருவது பற்றி பேசியதாக கூறுகிறார். அவர் அப்பாவோட போட்டோ போன் நம்பர் இல்லனா ரேஷன் கார்டு ஏதாவது எடுத்துட்டு வர சொன்னாங்க. எங்க அம்மா அப்பப்ப அரிசி வாங்க ரேஷன் கார்டு எடுத்துட்டு போவாங்க. அதை தேடி எடுத்துட்டு வரணும் என சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட பாரதி அதிர்ச்சி அடைகிறார்.
கண்ணம்மா மற்றும் தன்னுடைய பெயரில் வந்த ரேஷன் கார்டு எங்கே இருக்கிறது என யோசிக்க தொடங்குகிறார். முதலில் அதை கண்டு பிடிக்கணும் என நினைக்கிறார். இவர்கள் காரில் சென்று கொண்டிருக்க எதிரில் கண்ணம்மா ஆட்டோவில் லஷ்மியை தேடி வருகிறார். ஹேமா இதைப் பார்த்துவிட்டு சமையல் அம்மா என கூப்பிடுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
