Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹேமாவால் அதிர்ச்சி அடைந்த பாரதி.. வெண்பாவின் முடிவு. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update 02.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் சாந்தியிடம் வெண்பாவில் அம்மா ரூமில் பாரதி போட்டோ எதுவும் இருக்கக்கூடாது எல்லாத்தையும் எடுத்து க்ளீன் பண்ணு என கூறிவிட்டார். வெண்பா பாரதி போட்டோ மட்டும் இருக்கட்டும் என சொல்ல யாராவது வந்து இன்னொருத்தியோட புருஷன் போட்டோ என்ன ஏன் உங்க பொண்ணு ரூம்ல இருக்கு என்ன கேட்டா நான் என்ன பதில் சொல்வது என கூறுகிறார். பிறகு சாந்தியை எடுத்து க்ளீன் பண்ணு நான் போன பிறகு எடுக்க விட மாட்டார் என சொல்ல சாந்தியும் எடுத்து க்ளீன் செய்கிறார்.

இந்த பக்கம் லட்சுமி பாரதி பெயர் பொறித்த பலகையை எடுத்து வைத்துக் கொண்டு ஏன் அம்மாவும் மட்டும் உங்களுக்கு பிடிக்கல என தனியாக பேசிக் கொண்டிருக்கிறார். உங்க ரெண்டு பேருக்கும் இடையே என்ன பிரச்சனை ஏன் விவாகரத்து வாங்க போறீங்க என புலம்புகிறார். இந்த நேரத்தில் குமார் அண்ணா வர உடனே பாரதி பெயர் குறித்த பலகையை மறைத்து விடுகிறார். அதன் பிறகு என்ன பண்ற என குமார் கேட்க பார்த்தா தெரியலை விளையாடிகிட்டு இருக்கேன். தனியா என்ன விளையாடுற என கேட்க என் கூட விளையாட யார் இருக்கா என சொல்கிறார். என் தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி என பேச்சை ஆரம்பித்து பின்னர் ஹேமா ஓட தாத்தா பாட்டியை நீயும் அப்படித்தான் கூப்பிடுவ என சமாளித்து விடுகிறார். ‌‌‌‌‌

பிறகு இந்த பக்கம் சௌந்தர்யா பாரதியுடன் லக்ஷ்மணன் பற்றியும் அவருடைய அம்மாவின் வளர்ப்பு பற்றியும் பேசி கண்ணம்மா குற்றமற்றவள் என்று ஆரம்பிக்கிறார். பாரதி மாற வேண்டியது நீங்கதான் நான் கண்ணால் பார்த்தது உண்மை என கூறி விட்டு மேலே சென்று விடுகிறார். மேலே தூக்கத்தில் ஹேமா சமையல் அம்மா ரொம்ப நல்லவங்க எனக்கு அம்மா இல்ல அவளுக்கு அப்பா இல்லை நீங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லுங்க டாடி என புலம்புகிறார். இதை கேட்ட பார்வதி அதிர்ச்சி அடைகிறார்.

இந்த பக்கம் வெண்பா பாரதியை அடைய என்ன வேண்டுமானாலும் செய்வேன். இந்த கண்ணம்மா இருக்கிற வரைக்கும் என்னால பாரதியோட சேர முடியாது. முதலில் விவாகரத்து கேட்க முடிந்து இருவரும் பிரியட்டும் அதோட நான் தனியா இருக்க மாட்டேன் பாரதியோட தான் இருப்பேன் என கூறுகிறார் வெண்பா.

இந்தப் பக்கம் கண்ணம்மா பாரதி விவாகரத்து பற்றி பேசியதை நினைத்து கடவுளிடம் வேண்டி வருத்தப்படுகிறார். இவ அப்பா யாருன்னு ரொம்ப ஆசைப்படுறா அவ அம்மா பாசத்துக்காக என்கிற குழந்தைகளுக்காவது சேர்ந்து வாழணும்னு நினைச்சா இவர் விவாகரத்து பெற்று பிரியறது பத்தி பேசுறாரு என வருத்தப்பட இதைப்பார்த்த லட்சுமி அம்மாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 02.05.22
Bharathi Kannamma Serial Episode Update 02.05.22