Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புது வண்டி வாங்கிய கண்ணம்மா. பாண்டி எடுத்த முடிவு. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update 03-01-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா புது வண்டி வாங்கி இருக்க அதில் கடைகளுக்கு சரக்கு எடுத்து சென்று டெலிவரி செய்கிறார்.

பிறகு பாண்டி செய்யும் பிசினஸ்களின் கணக்கு பார்த்து கணக்கு எந்தெந்த தொழிலில் எவ்வளவு லாபம் என சொல்லிக் கொண்டிருக்க அப்போது மசாலா தொழிலில் மட்டும் இரண்டு லட்சம் ரூபாய் நஷ்டம் என சொல்ல பாண்டி தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை நஷ்டம், நஷ்டத்துக்கு என்ன காரணம் என கேட்க கண்ணம்மா தான் என நண்பர்கள் சொல்ல அப்போ அந்த கண்ணம்மாவை பார்ட்னர் ஆக்கிடலாம் என முடிவெடுக்கிறார் பாண்டி.

பிறகு கண்ணம்மா வீட்டுக்கு வந்ததும் தாமரையிடம் வண்டி தங்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என பேசிக்கொண்டு இருக்க அப்போது தாமரையின் அப்பா மூச்சு விட முடியல நெஞ்சு வலிக்குது என சத்தம் போட்டு டிராமா போட பிறகு தாமரை பாரதி டாக்டரிடம் அழைத்து செல்லலாம் என அழைத்துச் செல்ல கண்ணம்மாவும் கூட செல்கிறார்.

அங்கு போனதும் பாரதியிடம் தாமரையின் அப்பா டிராமா என்பதை சொல்லிவிட அவர் இது ஏதோ புதுவித வைரஸ் மாதிரி இருக்கு கூட இருக்கிறவங்களுக்கும் தொற்றும் அதனால அவங்க கூட இருக்கவங்க செக்கப் செய்து கொள்ள வேண்டும் என சொல்ல பிறகு தாமரை செக்கப் செய்து கொள்கிறார்.

அதன் பிறகு கண்ணம்மாவை செக்கப் செய்ய அழைக்க கண்ணம்மா வேண்டாம் என மறுக்க பிறகு தாமரையும் அவரது அப்பாவும் உட்கார சொல்லி செக்கப்பிற்கு உட்கார வைக்கின்றனர். பிறகு பாரதி பரிசோதனை செய்வது போல கண்ணம்மாவை தொட்டு ரொமான்ஸ் செய்கிறார். பிறகு கண்ணம்மா அதை கண்டுபிடித்து விட பாரதி செக்கப் ஓவர் என சொல்லி அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update 03-01-23
bharathi kannamma serial episode update 03-01-23