Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்ணம்மா போட்ட பிளான்.. போன வேகத்தில் திரும்பி என் பாரதி.. பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update 03.02.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹோமாவை அழைத்துக்கொண்டு பாரதி வெண்பா வீட்டிற்கு போனதைத் தொடர்ந்து அங்கே பாரதியிடம் வெண்பா என்ன சாப்பிடுற டீ காபி ஜூஸ் எது வேணும் என கேட்கிறார். பாரதி காப்பி என சொன்னதும் காபி போட சென்றார் வெண்பா.

அந்த நேரத்தில் கரெக்டாக காலிங் பெல் அடிக்க கதவை திறந்த வெண்பாக் யார் எனக்கேட்க நாங்க இந்த ஏரியாவுல செக்கரட்டரி, துணை சேர்மன் என கூறுகின்றனர். ‌ மெயிண்டனன்ஸ் வாங்க வந்தீங்களா நேற்று கொடுத்து விட்டேனே என வெண்பா சொல்ல அது இல்ல விஷயம் என உள்ள போயி பேசலாமா என்று உள்ளே வருகின்றனர்.

இவர் யார் என கேட்க பேரு பாரதி பெரிய கார்டியாலிஸ்ட் டாக்டர் என சொல்கிறார். இவர் கூட ஒரு பொண்ணு வந்துச்சே அது எங்கே எனக் கேட்கின்றனர் அது இவருடைய பொண்ணு என கூறுகிறார். இங்கே எதுக்கு வந்தாங்க என கேட்க ஆறு மாசம் இங்க தான் தங்க போறாங்க என வெண்பா கூறுகிறார். கல்யாணம் ஆகாத பொண்ணு வீட்டுல கல்யாணம் ஆன அவரு வந்து தங்கினா என்ன அர்த்தம் இது வீடா இல்ல லாட்ஜா? என சொல்ல பாரதி அப்படி எல்லாம் பேசாதீங்க என கடுப்பாகிறார். வேற எப்படி பேச சொல்றீங்க இங்கே கவுரமான குடும்பங்கள் இருக்கிற இடம். இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சம்மதிக்க மாட்டோம் என கூறுகின்றனர். வெண்பா அவர்களிடம் கோபப்பட போலீசை கூப்பிடுவேன் என மிரட்டுகின்றனர்.

பொலீஸ் எல்லாம் வேண்டாம் என்னுடைய தப்புதான் நான் இதை யோசித்து இருக்கணும் என சொல்லிவிட்டு பாரதி அங்கிருந்து ஹேமாவைக் கூட்டிக் கொண்டு கிளம்பி விடுகிறார். வெளியே போனதும் கண்ணம்மா அங்கு ஆட்டோவில் வந்து இறங்க அவர்களிடம் வெண்பா வீட்டிற்கு வந்த மூவரும் நன்றி கூறுகின்றனர். பிறகு பாரதியின் சைகையில் கடுப்பேற்ற அவர் கடுப்பாகி கிளம்பிவிடுகிறார்.

வீட்டிற்குள் வெண்பா நான் கண்ட கனவெல்லாம் நாசமா போச்சு என கதறி அழ அதை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார் கண்ணம்மா. கண்ணம்மாவை பார்த்ததும் அழுகையை நிறுத்தி விடுகிறார். உள்ளே போன கண்ணம்மா வெண்பா கீழே உட்கார்ந்து இருக்க ஷோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து என்ன மாசா கெத்தா என கூறுகிறார். நீ என் வீட்ல வந்து டயலாக் பேசியபோது ஒரு நிமிஷம் கூட பாரதி இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணுனேன். எப்படி சிறப்பாக பண்ணிட்டேனா என சொல்கிறார். ‌

அதன் பிறகு எப்படி ஹேமா உன்ன டாக்டரம்மா டாக்டர் அம்மானு கூப்பிடவாளா? அவ என் கையால சாப்பிட்டவன் எப்படி உன்னை வெறும் ஆண்டினு சொன்னா பாத்தியா? என வெறுப்பேற்றுகிறார். இப்ப சொல்றேன் கேட்டுக்க நீயும் பாரதியும் எப்பவும் சேர முடியாது. எப்பவும் என் புருசனை விட்டுக் கொடுக்க மாட்டேன். நான் எந்த தப்பும் பண்ணாதவன் 2 குழந்தைகளுக்கு அப்பா அவர்தான் என நிரூபிப்பேன். அவரை என்கிட்ட மன்னிப்பு கேட்க வைப்பேன். நானும் அவரும் இரண்டு குழந்தைகளும் சந்தோஷமாக வாழ்வோம். அதை நீ பார்த்து வயிறு எரிஞ்சு செத்துப் போவ தான் போற என கூறுகிறார்.

இப்போ உன் மனநிலை எப்படி இருக்கு? வேணும்னா ஒன்னு பண்ணு இப்படியே போய் செத்துவிடு என கூறுகிறார். பிறகு அங்கிருந்து கிளம்பிய கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு போன் செய்து நடந்ததை கூறுகிறார். உங்க புள்ள அம்மாவ கூட்டிக்கிட்டு அங்க வந்து விடுவார் என சொல்கிறார். பிறகு சௌந்தர்யா இந்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார்.

பிறகு வீட்டுக்கு குலோப் ஜாமுன் வாங்கி சென்று லஷ்மியிடம் கொடுக்கிறார் கண்ணம்மா. பிறகு இலட்சுமி நீ சொன்ன மாதிரி உன் பிறந்தநாளுக்கு அப்பா வருவாரா என கேட்கிறார்? உடனே அங்கிருந்த குமார் அண்ணா அப்படி அந்த டாக்டர் சார் வராரா என கேட்கிறார். இதனால் கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். டாக்டர் சாரா என லட்சுமி கேட்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 03.02.22
Bharathi Kannamma Serial Episode Update 03.02.22