Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்ணம்மாவை புகழ்ந்து பேசிய விக்ரம்.. ஹேமாவை திட்டிய பாரதி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update 03.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா பாரதி விவாகரத்து பற்றி பேசியதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவரை அழைத்துச் சென்று உட்கார வைத்து தலைவாரி மேக்கப் செய்து அழகுபடுத்தி ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கிறார் லட்சுமி. மேலும் நீ சிரிச்சா ரொம்ப அழகா இருக்க எப்போதும் இப்படியே சிரிச்சுக்கிட்டே இருக்கணும் என கூறுகிறார்.

அதன்பிறகு இந்த பக்கம் வெண்பா கண்ணம்மா வீடியோ காலில் பாரதி பற்றிய பேசியதை திரும்பத் திரும்ப பார்த்து கடும் கோபத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில் வந்த சாந்தி காபியை கொடுத்துவிட்டு எல்லாத்துக்கும் காரணம் பாரதிதான். ஷர்மிலா அம்மா அவரை சந்தித்து பேசும் போது விவாகரத்து கேஸ் முடியட்டும் அப்புறம் கல்யாணத்தை பத்தி பேசிக்கலாம் என சொல்லி இருக்கலாம். அத விட்டுட்டு எங்க அம்மா எதுக்கு என்கிட்ட வந்து கல்யாணத்த பத்தி பேசுறாங்க என உங்ககிட்ட சத்தம் போட்டது தான் ரொம்ப தப்பு. நீங்க அவர காதலிக்கிறேன்னு உலகத்துக்கே தெரியுமே அப்படி இருக்கும் போது அவருக்கு தெரியாதா.?

சர்மிளா அம்மா உங்கள கல்யாணம் பண்ணிக்க போறவருக்கு ஏதோ ஒரு டீல் வச்சிருக்கேன்னு சொன்னாங்க, அது என்னமோ என கேட்க தெரியல சாந்தி நானும் அதைதான் யோசிச்சுட்டு இருக்கேன் என கூறுகிறார். உங்க வாழ்க்கையில நல்லது நடக்கப் போகுதுன்னு சந்தோஷமா இருக்கு என சொல்ல நீ வெறுப்பேத்தாத வெளியே போ என கோபப்பட்டு வெண்பா விருவிருவென பாரதியை பார்க்க கிளம்புகிறார்.

பாரதியைப் பார்க்க போன வெண்பா உன் கண்ணு எதிர்க்கத்தான் என்ன அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போனாங்க ஒரு பிரண்டுக்கு ஆபத்துன்னா உதவணும்னு எண்ணம் கூட உனக்கு இல்ல. அந்த கண்ணம்மா கூட திரும்பவும் உங்க அம்மா உன்னை சேர்த்து வைக்கத் தான் போறாங்க. திரும்பவும் யார்கிட்டயாவது புள்ளையை வாங்கிட்டு வரப் போறா என சொல்ல பாரதி டென்ஷன் ஆகிறார். வெண்பா அவ்வளவுதான் லிமிட் என சொல்ல கண்ணம்மாவை பற்றி பேசியதும் கோவம் வருதா என கூறுகிறார். இப்ப சொல்றேன் கேட்டுக்க ஐ ஹேட் யூ, ஐ ஹேட் யூ என கூறுகிறார். இனிமே என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் நான் பார்த்துக்கிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

பிறகு வெளியே வந்த ஹேமா வெண்பா ஆன்ட்டி மாதிரி இருக்கு அவங்க எதுக்கு வந்து போறாங்க என கேட்க பாரதி கோபப்படுகிறார். இதனால் ஹேமா இனிமே உன்கிட்ட பேசமாட்டேன்‌. இப்ப நான் என்ன கேட்டேன் என்கிட்ட கோபப்படாதீங்க என கோபித்துக்கொள்ள பிறகு பாரதி சாரி கேட்கிறார். இந்த வெண்பா வந்துவிட்டுப் போனாலே தேவையில்லாத பிரச்சனை வருது, இனிமே அப்பாவை பார்க்கவே கூடாது. அதற்கு ஏதாவது செய்யணும் என யோசிக்கிறார்.

பிறகு மருத்துவ மனைக்கு போன கண்ணம்மா ஒவ்வொருவரிடமும் வேலைகள் பற்றி கேட்டிருக்கிறார். நோயாளிகளிடம் அவர்கள் உடல் நலம் குறித்து கேட்கிறார். வேலை செய்பவர்களிடம் அக்கறை காட்டுகிறார். இதையெல்லாம் பார்த்த விக்ரம் வேணுவுக்கு போன் செய்து கண்ணம்மா எல்லோரையும் அன்பால அடிமை ஆகிவிட்டா. அட்மினிஸ்ரேட்டிவ் வேலைய ரொம்ப அழகா செய்கிறார் எனப் பாராட்டுகிறார். இதைக்கேட்டு வேணு சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 03.05.22
Bharathi Kannamma Serial Episode Update 03.05.22