Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெண்பாவை பற்றி பேசிய ஜோசியர்.. கடுப்பான வெண்பா..இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update 04.04.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் ஸ்கூல் மிஸ் கண்ணம்மாவிடம் வந்து உங்களுக்கும் பாரதிக்கும் கல்யாணம் நடக்கப் போகுதா என கேட்கிறார். இதனால் கண்ணம்மா அதிர்ச்சியாகி ஏன் இப்படி கேட்கறீங்க எனக் கேட்க ஹேமா எழுதியிருந்ததை கூறுகிறார். மிஸ் ஹேமா ஆசைப்படுவது நல்ல விஷயம் தான் கடவுள் செய்ய வேண்டியதை குழந்தைகள் மூலமாக செய்ய ஆசைப்படலாம். உங்க ரெண்டு பேர் பத்தியில் எனக்கு நன்றாக தெரியும் ஆகையால் நீங்க இதுக்கு தாராளமாக ஓகே சொல்லலாம். அவர் டாக்டர் நான் சமையல் செய்கிறவங்கனு நினைத்தால் சொல்லுங்க நான் பாரதியிடம் பேசுகிறேன் என கூற அதெல்லாம் வேண்டாம் என காதல் இங்கே இவ்வளவு தூரம் பேசியதே ரொம்ப சந்தோஷம் என கூறுகிறார்.

அதன்பிறகு லட்சுமி என்ன எழுதி இருந்தார் எனக் கேட்க அதை நான் பார்க்கவே இல்லை ஒரு நிமிஷம் என லட்சுமி எழுதிய பேப்பரை தேடுகிறார் மிஸ். அதற்குள் லட்சுமி வந்துவிட அதைப் படித்தால் எனக்கு அப்பா யார் என்ற விஷயம் தெரிந்து விட்டது என்பது அம்மாவுக்கு தெரிந்துவிடும் என பயப்படுகிறார். அதற்குள் வேறு ஒரு ஆசிரியை சந்தேகங்களை பள்ளி முதல்வர் கூப்பிடுவதாக சொல்ல அவர் அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

அதன்பிறகு லட்சுமி ஹேமாவோட அம்மா யார் எனக்கேட்க கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். அதெல்லாம் எனக்கு தெரியாது என சொல்ல எப்படி அவங்க வீட்ல இருக்க எல்லோரையும் உனக்கு தெரியும் அவங்க அம்மாவும் மட்டும் தெரியாத பொய் சொல்லாதே என கூறுகிறார். உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத கேள்வி இதை பற்றி இதோட பேசாத என சொல்லி விடுகிறார். இல்லனா போய் உன் டாக்டர் அப்பா கிட்டே கேளு என்ன சொல்கிறார். நானே ஹேமாவோட அம்மா யாருன்னு கண்டு பிடிக்கிறேன் என சவால் விடுகிறார் லட்சுமி.

அதன் பின்னர் ஹேமா ஓடி வந்து கண்ணம்மாவிடம் வந்து நான் சொன்னதைப் பற்றி யோசித்து சொல்லுங்க என கூறுகிறார். எங்க டாடி உங்கள ரொம்ப நல்லா பார்த்து பாரு, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறுகிறார். முதலில் வெண்பா ஆன்ட்டியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான் நினைத்தேன் ஆனால் அவர்கள் ரொம்ப மோசம். அதன் பிறகு தான் உங்களை கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு செய்தேன் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் அகிலன் மற்றும் அஞ்சலி இடையில் சிறிய பிரச்சனை ஏற்பட்டு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட சௌந்தர்யாவின் கணவர் வந்து இருவரையும் திட்டி அமைதிப்படுத்தி விட்டு செல்கிறார். இந்த பக்கம் சாந்தி ஜோசியர் ஒருவரை அழைத்துச் சென்று வெண்பாவின் ஜாதகம் பற்றி கேட்கிறார். ஜாதகம் ரொம்ப நல்லா இருக்கு. நல்ல ஜாதகத்தில் ரெண்டு வகை இருக்கு பொண்ணு எல்லோருக்கும் நல்லது செய்து நல்ல பெயர் எடுப்பது. இன்னொன்னு எல்லோருக்கும் கெடுதல் செய்து பெயர் வாங்குவது. இது இரண்டாவது வகை என கூறுகிறார்.

மேலும் இந்த ஜாதகக்காரர் இப்போது தான் எடுப்பதுதான் முடிவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். நினைத்ததை அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருப்பவர். 10 பேர் கூடி இருந்தாலும் பத்து பேருக்கும் சேர்த்து முடிவெடுப்பவர் இவராகத்தான் இருப்பார். ஒருத்தரை பிடிக்கலனா அவுங்களை வச்சி செய்வார். அவ்வளவு எளிதாக சும்மா விடமாட்டார் எல்லாம் சரிதான் என வெண்பாவும் சாந்தியும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

மேலும் இந்த ஜாதகருக்கு நினைச்ச காரியம் நடக்கப் போகுது. கல்யாண கலைக்கூடி வந்துடுச்சு என சொல்ல சாந்தி அப்போ அம்மா அவங்க ஆசைப்படுற பாரதியை கல்யாணம் பண்ணிப்பாங்களா என கேட்கிறார். பாரதியோ சாரதியோ அதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் இவங்க விரும்பாத கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பே கிடையாது. இவர்களே விரும்பி ஏற்றுக்கிற ஒரு ஆள்தான் வரப்போறாரு என சொல்கிறார். ராகு கேது பெயர்ச்சியால் இவங்க வாழ்க்கையே மாறப் போகுது. இது வரைக்கும் எல்லாரையும் ஆட்டி வெச்ச இவங்கள இனி எல்லோரும் ஆட்டி வைப்பாங்க. வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறும் என கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த வெண்பா ஜோசியரை திட்டி வெளியே அனுப்புகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌

 Bharathi Kannamma Serial Episode Update 04.04.22

Bharathi Kannamma Serial Episode Update 04.04.22

‌‌