Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லட்சுமியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த சௌந்தர்யா .. வெண்பாவுக்கு அதிர்ச்சி தரும் ஷர்மிளா .. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update 05.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் வெண்பா பாரதியை திட்டி விட்டு முகத்துக்கு நேராக ஐ ஹேட் யூ என சொல்லி விட்டேன் என சாந்தியிடம் சொல்லி புலம்புகிறார். இந்த நேரத்தில் வந்த ஷர்மிளா இப்ப தான் என் பொண்ணா கரெக்டா நடந்திருக்க வார்த்தையில் மட்டும் சொன்னால் போதாது செயலையும் செய்து காட்டணும். கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கைல நல்லபடியா வாழனும் என சொல்கிறார். சாந்தியை போய் ஸ்வீட் செய்ய நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் என கூறுகிறார். பிறகு என் கையில் இருந்த ஜூஸ் கிளாஸை தூக்கி போட்டு உடைக்கிறார்.

அதன் பிறகு இந்தப் பக்கம் ஒரு தம்பதி குழந்தையை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகின்றனர். வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது கார் ஒன்று ராங் ரூட்டில் வந்து மோதி விட்டது எங்களுக்கு பெரிய அளவில் காயம் இல்லை குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகம் வந்து விட்டது என கூறுகின்றனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் மூளை சாவு அடைந்து விட்டதாக கூறுகிறார். இனிமேல் குழந்தையைக் காப்பாற்றுவது கஷ்டம் என சொல்கிறார்.

இந்தப் பக்கம் ஹேமா வெண்பாவை எப்படி பாரதியிடம் பேசுவதை தடுத்து நிறுத்துவது என யோசித்துக் கொண்டிருக்க அப்போது வந்த லட்சுமி என்ன தனியா உட்கார்ந்து இருக்கே என கேட்க வெண்பா பற்றி சொல்கிறார். லட்சுமியும் எங்க அம்மாவுக்கும் வெண்பாவை பிடிக்காது என சொல்ல அவங்க அப்பாவோட பேசுவதை எப்படியாவது தடுத்து நிறுத்தவும் அதுவும் அப்பாவிற்கு தெரியாமல் செய்யவும் என ஹேமா சொல்கிறார். சரி யோசிச்சி எதையாவது செய்யலாம் என லட்சுமி கூறுகிறார். பிறகு டீச்சர் எல்லோரையும் அழைத்து அப்பாவைப் பற்றிப் பேச்சு போட்டி உள்ளது கலந்துகொள்வார்கள் பெயரை கொடுக்கலாம் என்று சொன்ன பல மாணவர்கள் பெயர் கொடுக்க லட்சுமி பெயர் கொடுக்கவில்லை. பிறகு ஏன் என கேட்க நான் என்ன பேசுவது எனக்கு தான் அப்பா இல்லையே என கூறுகிறார்.

பிறகு லட்சுமி தனியாக உட்கார்ந்து கொண்டிருக்க சௌந்தர்யா அங்கு வந்து ஏன் தனியாக இருக்க எனக்கேட்க பேச்சுப் போட்டி நடக்கிறது என சொல்ல நீ கலந்துக்க வேண்டியதுதானே என்று கேட்கிறார். அப்பாவைப் பற்றி பேச வேண்டும் நான் யாரைப்பற்றி என்ன பேசுறது அவங்களுக்கு அப்பாவா டாக்டர் அப்பா இருக்காரு. அவள நல்லா பார்த்துக்கிறார் கதை சொல்ற படிக்கவைக்கிறார். நானும் வீட்டுக்கு வந்தார் என்னையும் நன்றாக பார்த்து இருக்கிறார் படிக்க வைக்கிறார் எல்லாம் சரிதான் ஆனால் அவரைப் பற்றி நான் பேச முடியாது தானே. என் அப்பா வேற யாரோ தானே என கேட்க சௌந்தர்யா பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். பிறகு பாரதியும் கண்ணம்மாவும் விவாகரத்து ஏற்பட்டு சௌந்தர்யாவிடம் சொல்ல உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்ன கூறுகிறார் லட்சுமி. என்ன என கேட்க இல்ல அப்புறம் சொல்கிறேன் என சொல்லி விடுகிறார்.

இந்த பக்கம் இதயம் பலவீனமாக உள்ள சக்தி என்ற குழந்தை விளையாடிக் கொண்டிருக்க அவளுடைய அம்மா போதும் எனச் சொல்லியும் கேட்காமல் 5 நிமிடம் என தொடர்ந்து விளையாட திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துவிடுகிறது. பிறகு எமர்ஜென்சி வார்டுக்கு அழைத்துச் செல்ல பாரதி பரிசோதனை செய்ய உள்ளே செல்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 05.05.22
Bharathi Kannamma Serial Episode Update 05.05.22