விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வெண்பா மருத்துவமனையில் மீண்டும் கத்தியை வைத்து தற்கொலை செய்து கொண்டேன் என மிரட்ட பாரதி அவளை திட்டுகிறான். பிறகு பாரதி எனக்காக நிறைய விஷயத்தில் வெண்பா உதவி செய்திருக்கிறார் அவளுக்காக இந்த உதவியை செய்வது தப்பில்லை என நினைத்துக் கொண்டு அதற்கு ஒத்து கொள்கிறார்.
அதன்பின்னர் வெண்பா சந்தோஷமடைந்து பாரதியை கட்டி பிடித்துக் கொள்ள இந்த பக்கம் சௌந்தர்யா பாரதி வீட்டுக்கு வரவில்லை என நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அகில் ஆறுதல் கூறுகிறார். பிறகு மறுநாள் சாந்தி வெண்பாவை வந்து சந்திக்க அவளிடம் பாரதி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார். பின்னர் ஷர்மிளாவுக்கு போன் செய்து ஃபுட் பாய்சன் ஆயிடுச்சு அதனால ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனேன் இப்போ வீட்டுக்கு வந்து விடுவேன் என கூறுகிறார்.
பாரதி வீட்டுக்கு வர அவனிடம் சௌந்தர்யா நைட்லாம் பொறாமை எங்க போயிருந்த பிரண்டுக்கு கல்யாணம் அதனால பார்ட்டி என சொல்ல சௌந்தர்யா நீ பொய் சொல்ற என்பது உன் வார்த்தையிலேயே தெரியுது உனக்கு குற்ற உணர்ச்சி கண்ணம்மா மேல உனக்கு கோபம் போயிடுச்சு ஆனா அவளோட சேர்ந்து வாழ ஈகோ தடுக்குது அதனாலதான் எங்க முகத்துல முழிக்க முடியாம ஓடி ஒளியற என பேச தேவையில்லாம கண்டத பேசிட்டு இருக்காதீங்க என உள்ளே சென்று விடுகிறார்.
நான் செய்யறது தப்புன்னு தெரியுது இதிலிருந்து நான் எப்படி வெளியே வர போறேன் என தெரியல என்று பாரதி குழம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.