Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெண்பாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் ஷர்மிளா.. லஷ்மிக்கு உண்மை தெரிந்ததைக் கண்டு பிடித்த சௌந்தர்யா..இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update 06.05.22

தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு சக்தியை பரிசோதனை செய்த பாரதி அவருடைய பெற்றோரிடம் இப்போதைக்கு அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை ஆனால் இன்னும் ஒரு வாரத்திற்குள் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும் இல்லை என்றால் சிக்கலாகி விடும் எனக் கூற அவர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

நாங்களும் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக டோனரை தேடிக்கொண்டுதான் இருக்கிறோம் நல்லது நடக்கும் என நம்புவோம் என பாரதி கூறுகிறார். இந்த பக்கம் வெண்பா மாடர்ன் உடையில் கீழே வந்து அம்மாவின் பக்கத்தில் உட்கார அவர் என்ன இது? போய் டிரஸ் மாத்திட்டு வா என சொல்லி பட்டுப்புடவையை கொடுக்கிறார். வேற வழி இல்லாமல் வெண்பாவும் சென்று புடவையை மாற்றி கொண்டு வந்து நிற்க எவ்வளவு அழகா இருக்க என அவருக்கு முத்தமிடுகிறார்.

பிறகு கேமராமேனை வரவைத்து போட்டோக்களை எடுக்கிறார். பிறகு வெண்பாவை தனியாக நிற்க வைத்து போட்டோ களை எடுக்க சொல்ல ஏன் எதுக்கு என அவர் கேள்வி எழுப்ப மாப்பிள்ளை பார்க்க அவர்களுக்கு கொடுத்து அனுப்ப தான் என சொல்கிறார். மாப்பிள்ளைக்கு ஏதோ ஒரு டீல் வச்சிருக்கேன் ன்னு சொன்னியே அது என்ன என கேட்க நம்ம கம்பெனியில் 50% ஷேர் கொடுக்கப் போகிறேன் என சொல்கிறார். அம்மா என்ன இவ்வளவு மும்மரமாக இருக்காங்க இதில் இருந்து தப்பிக்கவே முடியாது போலயே என வருத்தப்படுகிறார் வெண்பா.

இந்த பக்கம் பாரதி விக்ரமுடன் டோனர் பற்றி பேசிக் கொண்டிருக்க அப்போது அவருக்கு விழுப்புரத்திலிருந்து ஒரு போன்கால் வருகிறது. இதை மாற்று அறுவைச் சிகிச்சைக்காக டோனர் வேண்டும் என வாட்ஸ் அப்பில் தகவல் பார்த்தேன் இங்கே ஒரு குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டார் அவருடைய இதயம் அந்த குழந்தைக்கு பொருந்தும் என சொல்ல சரி நானே வந்து அந்த குழந்தையின் பெற்றோரிடம் பேசுகிறேன் என பாரதி சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.

பிறகு இந்த விஷயத்தை விக்ரமிடம் சொல்ல அவர் நமது டீமையும் அட்மின் கண்ணம்மாவையும் அழைத்துக் கொண்டு செல் என சொல்கிறார். பாரதி மனமில்லாமல் கண்ணம்மாவை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

இந்த பக்கம் சௌந்தர்யா ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வந்தது டென்ஷனில் இருக்க அவருக்கு தண்ணீர் கொடுத்து கூலாக்கி என்னாச்சு என்ன ஏது என வேணு விசாரிக்க லட்சுமிக்கு பாரதிதான் அப்பா என உண்மை தெரிந்தது என சொல்கிறார். அப்படித்தான் நினைக்கிறேன் அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பார்வையும் எனக்கு அப்படித்தான் இருந்தது என கூறுகிறார். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என சொல்ல இல்லை அவளுக்கு உண்மை தெரிந்து விட்டது என உறுதியாகக் கூறுகிறார் சௌந்தர்யா.

முன்னெல்லாம் பாரதியை அவர் டாக்டர் அங்கிள் என்று தான் கூப்பிடுவா ஆனா இப்போ டாக்டர் அப்பானு கூப்பிடுறா, நம்ம வீட்டுக்கு வந்தா அவர் சகஜமா இருக்க மாட்டார். இப்ப என்னவோ உரிமையா பேசி பழகுற மாதிரி இருக்கு. நான் அவளுக்கு உண்மை தெரிந்துவிட்டது சந்தோஷப்படவா இல்ல அவ இதை எப்படி மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு கஷ்டப்படுறானு வருத்தப்படுறதானு தெரியல. அவளுக்கு உண்மை தெரிஞ்சு போச்சு நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்கிறேன் என சௌந்தர்யா சொல்கிறார்.

விழுப்புரத்திற்கு சென்ற பாரதி ஆயிஷாவின் பெற்றோரை சந்தித்து உங்கள் குழந்தை மூளை சாவு அடைந்து விட்டார் என சொல்ல அவர்கள் கண் கலங்கி வருகின்றனர். நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க என பாரதி சொல்ல இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 06.05.22
Bharathi Kannamma Serial Episode Update 06.05.22