தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியிடம் நாங்க சமையல் அம்மா வீட்டுக்கு போறோம். அவங்க பிறந்த நாளைக்கு லட்சுமியோட அப்பா யாருன்னு லட்சுமிக்கும் எல்லோருக்கும் சொல்ல போறாங்க. அதுக்குத்தான் நாங்க போறோம் என சொல்ல பாரதி இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அவளோட குழந்தைக்கு வருண் தான் அப்பா, ஆனால் எப்படியும் என்ன தான் சொல்லுவா பெரிய பிரச்சினை இருக்கும் போலயே என பாரதி யோசிக்கிறார். பிறகு அங்கிருந்து ஹேமா பாட்டியுடன் கிளம்பி விடுகிறார்.
இந்தப் பக்கம் கண்ணம்மாவிடம் லட்சுமி அப்பாவோட போட்டோ கேட்டு தொந்தரவு செய்ய அவர் போட்டோ இல்லன்னு சொன்னா கேட்க மாட்டியா என கோபப்பட்டு விடுகிறார். என் அப்பாவை நான் பார்த்தது இல்ல அதனால தான் ஆசையா கேட்டேன் என லஷ்மி பரிதாபமாக கூறுகிறார்.
இந்த பக்கம் வெண்பா தன்னுடைய ஜாமீன் கேட்டு எவ்வளவு செலவாகும் எனக் கேட்க நடந்ததை எல்லாம் சொல்லி கிட்டத்தட்ட 7 லட்சம் ரூபாய் செலவாச்சு என சாந்தி சொல்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியான வெண்பா இந்த மாயாண்டி ஏதோ கேம் விளையாடி இருக்கிறான் என சந்தேகப்படுகிறார். இருந்தாலும் இருக்கும் என சாந்தி சொல்ல அதுக்குத்தான் அந்த வக்கீலை வரச் சொல்லியிருக்கேன் என சொல்கிறார். வக்கீலும் வந்து விட அவரை அமர வைத்து நன்றாக பேசுவது போல பேசி எவ்வளவு செலவாச்சு என கேட்கிறார். வழக்கறிஞர் மாயாண்டி குடுத்துட்டாரு என சொல்ல இல்ல பரவால்ல எவ்வளவோ மேல் சொல்லுங்க என கேட்கிறார் நீங்களே பார்த்து கொடுங்க என வழக்கறிஞர் சொல்ல சாந்தி பணம் எடுத்து வா என உள்ளே அனுப்புகிறார். ஆனால் அவர் கையில் ஊசி பெட்டியோடு வருகிறார். விஷ ஊசி என சொல்லி வழக்கறிஞரை மிரட்டி உண்மையை வர வைக்கிறார் வெண்பா.
எனக்கு மட்டும் ஒரு லட்சம் தான் செலவாச்சு மாயாண்டி தான் இதை வைத்து பணம் கறக்கலாம் என திட்டம் போட்டு அவனே தான் பேசி பணத்தை வாங்கி வருவான். அந்த பணத்தில் ஆளுக்கு பாதி பாதி என பிரித்துக் கொள்வோம் என சொல்கிறார். பிறகு வெண்பா அந்த வழக்கறிஞரை மன்னித்து விடுகிறார்.
இந்தப் பக்கம் லட்சுமி அப்பாவை வரவேற்க சார்ட்டில் வெல்கம் அப்பா என எழுதிக் கொண்டிருக்கிறார். லக்ஷ்மியின் கண்ணம்மாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது லஷ்மி அப்பா வருவார் என கேட்க வருவார் என கண்ணம்மா மீண்டும் வாக்கு கொடுக்கிறார். இந்த நேரத்தில் சௌந்தர்யா வந்துவிட அவரிடம் லஷ்மி நான் எங்க அப்பாவோட போட்டோவை கேட்டேன் தரல என சொல்கிறார். சௌந்தர்யா தர வேண்டியது தானே சமையல் அம்மா என சொல்ல இருந்தா தர மாட்டேனா என கண்ணம்மா கூறுகிறார்.
பிறகு நீங்க நல்லா கோலம் போடுவீங்களாமே எங்க அம்மா சொன்னாங்க எனக்கு கோலம் போடக் அதுதாங்க எங்க அப்பா வரும்போது நான் தான் கோலம் போடணும் என லட்சுமி சொல்கிறார். உங்க அம்மாவும் நல்லா கோலம் போடுவாங்க என சௌந்தர்யா சொல்ல அது எப்படி உங்களுக்கு தெரியும் என மடக்கி விடுகிறார் லட்சுமி. நான் ஒரு முறை உங்க வீட்டுக்கு வரும்போது உங்க அம்மா அழகாக கோலம் போட்டுக்கிட்டு இருந்தாங்க அதனால தான் தெரியும் என சொல்கிறார் சௌந்தர்யா.
லட்சுமி அப்பாவுக்காக ஏங்குவதை பார்த்து கண் கலங்குகிறார் சௌந்தர்யா. பிறகு இருவருக்கும் கோலம் போட சொல்லித் தருகிறார். அதன் பின்னர் கண்ணம்மா குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கும்போது சாப்பிடுங்க என சொல்ல அவர் சாப்பிடாம தனியாக இருப்பாரு எனக்கு சாப்பிடத் தோணலை என சௌந்தர்யா சொல்கிறார். இதைக் கேட்ட ஹேமா என் அப்பாவும் தனியா தான் சாப்பிடுகிறார் அவர் கூட சாப்பிட யாரும் இல்லை என யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.