தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் பாரதி விழுப்புரம் சென்று விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஆயிஷா என்ற குழந்தையின் பெற்றோரிடம் சக்திக்காக இதயம் கேட்டு பேசுகிறார். ஆனால் பெற்றோர் குழந்தையை காப்பாற்றி கொடுக்க முடியும் என்றால் கொடுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். எங்க குழந்தையை என்ன பண்ணணுமோ அதை நாங்க பண்ணிக்கிறோம். அதை விட்டுட்டு இதயம் வேணும் கண்ணு வேண்டும்னு என் குழந்தையே கூறுபோட நினைக்காதீங்க அவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை என திட்டி அனுப்பி விடுகிறார்.
இதனால் பாரதி என்ன செய்வது என தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன் அப்போது விக்ரம் போன் செய்ய நடந்த விஷயத்தை கூறுகிறார். அதற்குள் இந்தப்பக்கம் கண்ணம்மா சக்தியின் பெற்றோரை வரவழைத்து அவர்களை ஆயிஷாவின் பெற்றோரிடம் பேச வைக்கிறார். இருவரும் ஆயிஷாவின் பெற்றோரின் காலில் விழுந்து எங்களது குழந்தையை காப்பாற்றுங்கள். உங்கள் குழந்தையை உயிர் பிழைக்க வைத்தது ரொம்ப கஷ்டம்னு சொல்றாங்க உங்கள் குழந்தையுடன் இதயத்தை என் பொண்ணுக்கு கொடுத்தால் அதன் மூலம் நீ உங்க பொண்ணோட இதயம் இந்த உலகத்துல துடித்துக் கொண்டே இருக்கும். சக்தி என் குழந்தை மட்டும் கிடையாது நம்ம கூடப் பொறந்தவ மூலம் நான் உங்களோட மக்களும் உயிர் வாழ்ந்தான் என சொல்கிறார்கள். இதையெல்லாம் கேட்ட ஆயிஷாவின் பெற்றோர் இதயத்தை கொடுக்க சம்மதிக்கின்றனர். இதை மட்டும் இல்ல கண்ணு இன்னும் என்னென்ன வேண்டுமோ எல்லாத்தையும் எடுத்து விடுங்க அவளுடைய உறுப்புகள் மூலமாக அவள் இந்த உலகத்தில் வாழும் என் சொல்கிறார்கள்.
பிறகு இந்த விஷயத்தை கண்ணம்மா பாரதி இடம் சொல்ல முயற்சி செய்ய போனில் பேசிக் கொண்டிருந்த அவர் இப்ப என்ன தல போற விஷயமா பேசிட்டு தான் இருக்கேன் என சொல்ல ஆமாம் முக்கியமான விஷயம் தான் ஆயிஷாவின் பெற்றோர் இதயத்தை கொடுக்க சம்மதித்து விட்டார்கள் என சொல்ல பாரதி உண்மையாவ சொல்ற? அவங்க எப்படி ஒத்துக்கிட்டாங்க நான் இவ்வளவு பேச திட்டி அனுப்பினாங்க என சொல்ல சக்தியின் பெற்றோர் அவங்க கிட்ட பேசவே அவங்க ஒத்துகிட்டாங்க என சொல்கிறார். இது ரொம்ப நல்ல ஐடியா என பாரதி கண்ணம்மாவை பாராட்டுகிறார். பிறகு பாரதி ஆயிஷாவின் பெற்றோருக்கு நன்றி கூறுகிறார். விஷயம் அறிந்ததும் விக்ரம் கண்ணம்மாவை பாராட்டியதாக சொல்லச் சொல்கிறார்.
பிறகு இந்தப் பக்கம் விக்ரம் சௌந்தர்யாவுக்கு போன் செய்து நடந்த விஷயங்களைச் சொல்கிறார். கண்ணம்மா சாதூர்யமாக செயல்பட்டு ஆயிஷாவின் பெற்றோரை சம்மதிக்க வைக்க விஷயத்தை கூறுகிறார். இதன்பிறகு சக்திக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து அவரை காப்பாற்ற வேண்டும். அதற்கான வேலைகளை தொடங்க வேண்டும் என கூறுகிறார். பிறகு விக்ரம் போனை வைத்த சௌந்தர்யா வீட்டிற்கு திடீரென என்ட்ரி கொடுக்கிறார் வெண்பாவின் அம்மா ஷர்மிளா.
இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.