தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வக்கீல் வந்து போனதை அடுத்து வெண்பாவும் சாந்தியும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் கரெக்டாக வருகிறார் மாயாண்டி. என்னவெல்லாமோ டல்லா இருக்கீங்க ஏதாவது பிரச்சனையா கண்ணம்மா வந்து போனாளா என மாயாண்டி கேட்கிறார். உடனே வெண்பா எந்திரிடா என மாயாண்டி மீது கோபப்படுகிறார்.
என ஜாமீன்ல எடுக்க என்ற பெயரில் அந்த வகையில் வைத்து எவ்வளவு பணம் ஏமாற்றி இருக்க, எல்லாம் எனக்கு தெரிஞ்சிடுச்சு என சொல்கிறார். தெரிஞ்சிடுச்சா இவ்வளவு லேட்டாட்டு இதை தெரிஞ்சிக்க என மாயாண்டி நக்கலாக பேச வெண்பா கோபப்படுகிறார். சாந்தியும் கூட சேர்ந்து சத்தம் போடுகிறார். வெண்பா அம்மா நெனச்சா ஆளே இல்லாம பண்ணிடுவாங்க என சொல்ல உங்க வெண்பா அம்மா என்ன மந்திரவாதியா என்னை மாயமாய் மறைய வைக்க என நக்கல் அடிக்கிறார்.
பிறகு நான் எல்லாத்தையும் சும்மா செய்யுறதுக்கு உங்க சொந்தகாரனா என்ன? அடுத்த முறை வரும்போது 5 இலட்சம் வேண்டும் இல்லனா பாரதி கிட்ட போய் எல்லா உண்மையும் சொல்லிடுவேன் என கூறுகிறார். இதனால் வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.
இந்த பக்கம் கண்ணம்மா வீட்டில் சௌந்தர்யா இரண்டு குழந்தைகளையும் வெளியே விளையாட அனுப்பிவிட்டு என்ன பண்ண போற? பாரதிய எப்படி இங்கே வர வைக்க போற. அவனுக்கு இன்னும் உன் மேல சந்தேகமா இருக்கு உன் பேர கேட்டாலே அவன் மனசுக்குள்ள தீ கொழுந்து விட்டு எரியுது. இந்த நேரத்துல நீ லட்சுமிக்கு வேற எங்க அப்பா யாருன்னு சொல்றேன்னு வாக்கு கொடுத்து இருக்க என சொல்ல கண்ணம்மா என்னை என்ன பண்ண சொல்றீங்க அத்தை என அழுகிறார். மேலும் ஆட்டோ டிரைவர் குமார் அண்ணா வீட்டில் நடந்த விஷயத்தை கூறுகிறார்.
சரி பாரதியை இங்க எப்படி வர வைக்க போற என கேட்க அதான் எனக்கும் தெரியல என சொல்கிறார் கண்ணம்மா. திரும்பத் திரும்ப கண்ணம்மா தெரியல தெரியல என பதில் சொல்ல இப்படியே சொல்லிட்டு இருந்தா அடிச்சு பல்லெல்லாம் உடைச்சிடுவேன் பார்த்துக்கோ என சௌந்தர்யா கோபப்படுகிறார். லட்சுமி அப்பாவைப் பார்க்கணும் என்று ரொம்ப ஆசையா இருக்கு. நீ வாக்கு கொடுத்த மாதிரி அவளுக்கு சொல்லலனா ஏமாந்து போயிடுவா.. அவளுடைய மனசை கொஞ்சம் நினைச்சுப் பாரு.
பாரதியை எப்படி வர வைக்கணும் என்று எல்லாம் உன்னோட வேலை அதுல நான் எதுவும் பண்ண முடியாது. தெரியல தெரியல நான் சொல்றத விட்டுட்டு என்ன பண்ணலாம் என்று யோசித்து அதற்கான வேலையை பண்ணு என கூறுகிறார். பிறகு அம்மா வீட்டுக்கு போகலாம் என சொல்ல சௌந்தர்யா அங்கிருந்து கிளம்புகிறார்.
வெண்பா வீட்டுக்கு போன பாரதி கண்ணம்மா தன்னுடைய மகளுக்கு அப்பா யாருனு சொல்லப் போவதாக சொல்கிறார். இதனால் அதிர்ச்சியான வில்வா யாரோ பெத்த பிள்ளைக்கு உன் அப்பா நீ எப்படி சொல்லலாம் என வெண்பா கூறுகிறார். ஆனா வக்கத்த குழந்தைக்கு நான்தாப்பா னு அவ இன்னும் நம்பிக்கொண்டு இருக்காளே என பாரதி சொல்கிறார். அதன் பின்னர் நீ அவளுடைய பர்த்டே ஃபங்ஷனுக்கு போகப் போறியா என கேட்க நான் ஏன் போக போறேன், போக மாட்டேன் என பாரதி கூறுகிறார். அதன்பிறகு நீ வெளியே எங்கேயாச்சும் ஊருக்கு போயிட்டு என சொல்ல நானும் அதைதான் யோசிச்சு வைச்சிருக்கேன் என பாரதி கூறுகிறார்.
பிறகு வீட்டுக்கு வந்த பாரதி சௌந்தர்யா சாப்பாடு பரிமாறிக்கொண்டே இருக்கும் நேரத்தில் என்ன சொன்னா உங்க சமையல் அம்மா என கேட்க போகும்போது என்கிட்டே சொல்லிட்டுதான் எப்போதும் என சௌந்தர்யா கூறுகிறார். என்ன என கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்த நினைக்கிறீங்களா என பாரதி கேட்க இத்துடன் பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.