தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சாப்பிட வந்து அமர்ந்த பாரதி என்ன சொன்னா சமையல் அம்மா என பேச்சை ஆரம்பிக்க சௌந்தர்யா நாங்கதான் போகும்போதே சொல்லிவிட்டு போனேன் அவ அவளோட பிறந்தநாளுக்கு லட்சுமியோட அப்பா யாருனு சொல்லப்போறா. அதுக்கு நான் என்ன பண்ணனும் என பாரதி கேட்க நீ அந்த பர்த்டே கொண்டாட்டத்துக்கு கண்டிப்பா வந்துடு என சொல்கிறார். என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு கூப்டு வச்சி அசிங்கபடுத்த பாக்கறீங்களா என்று பாரதி கோபப்படுகிறார்.
அதன் பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த வீட்ல எனக்குனு யார் இருக்கீங்க. என் என் மனசுல இருக்குறத பத்தி யார் நினைச்சு பார்க்கறீங்க என்று பாரதி சத்தம் போடுகிறார். ஒரு கட்டத்தில் சாப்பாடு வேண்டாம் என கோபப்பட்டு தட்டை தூக்கி போட்டு விட்டு மேலே செல்கிறார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஆனால் அதன் பின்னர் நீங்க எல்லாரும் ஏன் திட்டிக் கொண்டே இருக்கீங்க. அவர் பாவம் ரொம்ப பீல் பண்றாரு. எல்லாரை விட நீங்கதான் பாட்டியை அவரை அதிகமா திட்டிக்கிட்டே இருக்கீங்க. பசிக்குதுன்னு வந்து உட்காரு நீங்க அவருக்கு சாப்பாடு போடவில்லை. நீங்க ரெண்டு பேர் கூட சாப்பிடு என்று ஒரு வார்த்தை சொல்லல என திட்டுகிறார்
கோபப்பட்டு ஹேமாவும் மேலே சென்று விடுகிறார். இந்தப் பக்கம் லட்சுமி கண்ணம்மாவிடம் உனக்கு பிடிச்ச கலர் என்ன என் பேச்சைத் தொடங்கி அப்பாவிற்குப் பிடித்த கலர் என்ன என்று கேட்கிறார். என்ன சொல்வது எனத் தெரியாமல் கண்ணம்மா அமைதியாக இருக்க அந்த நேரத்தில் வாய்தா வடிவுக்கரசி வருகிறார். என் அப்பா எப்படி இருப்பார் என்று கேட்டால் சொல்லவே மாட்டாங்க அவருக்கு பிடிச்ச கலர் என்ன நீ கேட்டாலும் சொல்ல மாட்டாங்க. நான் அவருக்கு டிரஸ் எடுக்கணும் அவர் எப்படி இருப்பார் என்று தெரிந்தால் தானே எடுக்க முடியும். எது கேட்டாலும் அமைதியா இருக்காங்க இல்ல நா என்ன புடிச்சு திட்றாங்க லஷ்மி அழுகிறார்.
பிறகு வாய்தா வடிவுக்கரசி இல்லப்பா டாக்டர் பாரதி மாதிரியே இருப்பார். அப்பா யாருன்னு டாக்டர் பாரதிக்கும் தெரியும் என கொளுத்திப் போடுகிறார் வாய்தா வடிவுக்கரசி. அப்படியா என லக்ஷ்மி கேட்க கண்ணம்மாவும் ஆமாம் என தலையாட்டி விடுகிறார். இனி உயிரும் சொன்னதன்பே டாக்டர் அங்கிள் கிட்ட கேட்டுக்கொள்கிறேன் என அங்கிருந்து சென்றுவிடுகிறார் லஷ்மி.
இந்தப் பக்கம் பாரதி வருத்தப்பட்டு உணர்ந்து கொண்டிருக்க இங்கு வந்த சௌந்தர்யா வந்து சாப்பாடு எனக்காக வந்து சாப்பிடுவேன் நானே உனக்கு ஊட்டி விடுகிறேன் என பேசிக் கொண்டிருக்க அப்போது கையில் சாப்பாட்டுடன் வருகிறார் ஹேமா. பாட்டி திரும்பவும் அப்பாகிட்ட ஆரம்பிச்சுட்டீங்களா அவர் பாவம் அவரை விட்டு போங்க என்று சொல்லி விட்டு உங்களுக்குப் பிடித்த சப்பாத்தியும் குருமாவும் கொண்டு வந்துவிட்டேன் சாப்பிடுங்க என பாரதிக்கு ஊட்டுகிறார் ஹேமா. இனி உங்களுக்கு எதுவாக இருந்தாலும் என் கிட்ட கேளுங்க நான் பண்றேன். யார் உங்களை திட்டினாலும் நான் உங்களோடு இருப்பேன் என ஹேமா கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட பாரதி எமோஷனலா இருக்கு ஹேமாவை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுகிறார்.
இந்த பக்கம் லட்சுமி அப்பா வந்தா உன்ன தான் முதல்ல போட்டுக் கொடுப்பேன் என்று சொல்ல என்னை எதுக்கு போட்டுக் கொடுப்ப என கண்ணம்மா கேட்கிறார். பிறகு லஷ்மி அப்பா வந்ததும் அவரோட பைக்ல அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு போகணும். வீட்டுக்கு போகணும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது என அடுக்கடுக்காக ஆசைகளை சொல்லிக் கொண்டே போகிறார். அப்படியே லஷ்மி தூங்கிவிட இவ மனசுல இவ்வளவு ஆசைகளை வச்சிட்டு இருக்கா. எல்லாமே நல்லபடியா சொதப்பாமல் நடக்கணும் என கண்ணம்மா நினைக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
