Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாயாண்டியிடம் ஆதாரத்தோடு சிக்கிய வெண்பா.. ஹேமாவின் கனவை கேட்டு கடுப்பான பாரதி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update 09.03.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பா சாந்தியிடம் இதுவரை பாரதிக்காக செய்த எல்லா விஷயத்தையும் பேசி கோபப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் மேடம் என மாயாண்டி குரல் கொடுக்க அதிர்ந்துபோய் நின்றனர். பிறகு நீங்க பெரிய வில்லி தான் உங்கள நான் தான் சாதாரணமாக எடை போட்டு விட்டேன். பாரதியின் கண்ணம்மா அதையும் பிரிக்க என்னென்ன தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்து இருக்கீங்க என கூறுகிறார். நீ எப்ப வந்த என்னை சாந்தி கேட்க நான் எப்பவோ வந்துட்டேன் நீங்கதான் என்னை கவனிக்க மறந்து விட்டீர்கள் என கூறுகிறார். என் கையை வேற சும்மா இல்லாம இது எல்லாத்தையும் வீடியோவ ரெக்கார்ட் பண்ணிடிருச்சி என போனை எடுத்து காட்ட இன்னும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அந்த போனை கொடுத்து விடு உனக்கு எவ்வளவு வேணும்னாலும் தரேன் என வெண்பா கூறுகிறார். எனக்கு தேவை எனும்போது நானே கேட்டு வாங்கிக்கிறேன் இப்போதைக்கு எனக்கு எதுவும் வேண்டாம் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இப்படி வசமாகச் சிக்கிக் கொண்டோமே என வெண்பா புலம்புகிறார். இந்த வீடியோ மட்டும் பாரதிக்கு கண்ணம்மா வுக்க போனா அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சிடும் என புலம்புகிறார்.

இந்த பக்கம் கண்ணம்மாவிடம் லட்சுமி தினமும் ஹேமா எதுக்குமா உன்கிட்ட சாப்பிடுறா? நீ எதுக்கு அவர் வீட்டில் எல்லார்கிட்டயும் ரொம்ப நல்லா பேசுற. அவங்களும் என்ன ரொம்ப நல்லா பார்த்துக்குவாங்க. டாக்டர் அங்கிளும் எனக்கு என்ன வேணாலும் வாங்கி தர்றாரு. அவங்க நமக்கு சொந்த காரங்களா ஏன் இதெல்லாம் பண்ணனும் என கேட்க இதனால் அதிர்ச்சியான கண்ணம்மா கடைசியில் எல்லாத்துக்கும் நீதான் காரணம் ஊர்ல இருந்த நம்பல சென்னைக்குக் கூட்டி வந்தது நீ தான் அவங்கள அறிமுகப்படுத்தியது நீதான் இப்போ எதுக்குனு என் கிட்ட கேட்டா நான் என்ன பதில் சொல்றது என கூச்சல் போடுகிறார். அவங்க நல்ல மனுஷங்க பணமிருந்தாலும் எல்லோரிடமும் அன்பை பேசுறவங்க அதனாலதான் இப்படி இருக்காங்க என கூறி விடுகிறார்.

இந்த பக்கம் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ஹேமாவிடம் தன்னுடைய கனவு பற்றி கேட்க அவர் பெரிய செஃப் ஆகணும் என சொல்வதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். முன்னாடி பைலட் ஆகணும்னு தானே சொல்லிட்டு இருந்தேன் இப்ப என்ன என பாரதி கேட்க தெரியலையே இப்போது செஃப் ஆகணும்னு தோணுது என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார். உடனே பாரதி போதுமா என் பொண்ணோட வாழ்க்கையை ஸ்பாயில் பண்ணிடாதிங்க. அவள பாரதியோட மகளா சௌந்தர்யாவோட பேத்தியா வளரவிடுங்கள். அந்த சமையல் அம்மாவை பார்த்து இவளும் சமையல் செய்யப் போறேன்னு சொல்றா என கோபப்பட்டு விட்டு உள்ளே செல்கிறார்.

அதன் பிறகு இந்த பக்கம் வெண்பா மாயாண்டி இடம் வசமாக சிக்கியதால் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க திடீரென கிச்சனுக்கு சென்று ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுக்கிறார். இதைப்பார்த்த சாந்தி கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்கள் மாயாண்டியை சுட்டுக் கொன்றுவிட்டா அதோட முடிஞ்சு போயிடுமா போலீஸ் உங்கள பிடிச்சுடுவாங்க. ஏற்கனவே உங்க மேல கேஸ் இருக்கே அது உடன் ஆயுளுக்கும் நீங்க ஜெயில்ல தான் கிடக்கணும். அப்புறம் பாரதியோடு சந்தோஷமா எல்லாம் வாழ முடியாது என சொல்கிறார். இதனை இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 09.03.22
Bharathi Kannamma Serial Episode Update 09.03.22