தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சௌந்தர்யா வீட்டுக்கு வந்த ஷர்மிளா வரவேற்று உட்கார வைக்கிறார் சௌந்தர்யா. என்ன விஷயம் எதுவாக இருந்தாலும் போனிலேயே பேசி இருக்கலாமே என சொல்ல சில விஷயங்கள் நேரில் பேச வேண்டிய சில விஷயங்களை போனில் பேச வேண்டும். இது நேரில் பேச வேண்டிய விசயம் அதனால்தான் உங்களை பார்க்க வந்தேன் என சொல்கிறார் ஷர்மிளா. என்ன விஷயம் சொல்லுங்க எனக் கேட்க எல்லாம் கல்யாண விஷயமாகத்தான் என சொல்கிறார்.
இதைக் கேட்ட சௌந்தர்யா பாரதியை தான் மாப்பிள்ளை கேட்டு வந்து இருப்பதாக நினைத்துக்கொண்டு எங்க வீட்ல இருக்க 2 பசங்களுக்கும் கல்யாணமாகி பேரன் பேத்தி எடுத்து விட்டேன். உங்களுக்கு யாரோ தப்பான விஷயத்தை சொல்லி தப்பான முகவரி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள் என கூறுகிறார். கல்யாணம் ஆகாத பையன பாருங்க என சொல்கிறார். உடனே ஷர்மிளா நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க நீங்க ரொம்ப நாளா சென்னையிலே இருக்கீங்க. பெரிய பெரிய பிசினஸ் செய்து இந்த அதனால உங்களுக்கு நிறைய பேரு தெரிந்திருக்கும். அவங்களும் கல்யாணத்துக்கு பொண்ணு பார்ப்பாங்க அப்படி வெண்பாவுக்கு ஏற்ற மாப்பிள்ளை யாராவது இருந்தா ரெஃபர் பண்ணுங்க என்ன உதவி கேட்டுத் தான் வந்தேன் என சொல்ல சௌந்தர்யா ரொம்ப நல்ல விஷயம் கண்டிப்பாக நான் உதவி செய்கிறேன் என வாக்கு கொடுத்து அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு சௌந்தர்யா வீட்டில் உள்ளவர்களிடம் இது பற்றி சொல்ல அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அகிலன் ஷர்மிளா நமக்கு வில்லியாக இருப்பாங்கனு நெனச்சா வெண்பாவிற்கு தான் வில்லியா இருக்காங்க என கூறுகிறார். மேலும் இன்னொரு விஷயம் என சொல்லி கண்ணம்மா சக்தியை ஆபரேஷனுக்கு டோனரை சம்மதிக்க வைத்து விஷயத்தை கூறுகிறார். இதைக்கேட்டு வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்த பக்கம் விக்ரம் கண்ணம்மா பாரதி மற்றும் கணேசன் என்கிற இன்னொரு டாக்டர் ஆகியோர் சக்தியின் ஆபரேஷனை எப்படி செய்து முடிப்பது என பேசிக் கொண்டிருக்கின்றனர். விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு இதயத்தை கொண்டு வரும் பணியை கண்ணம்மா செய்யட்டும் என விக்ரம் சொல்ல அதைக்கேட்டு பாரதியும் கணேசனும் அதிர்ச்சி அடைகின்றனர்.
பாரதி இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் இதை கணேசன் செய்யட்டும் என சொல்ல கண்ணம்மாவும் அவரே செய்யட்டும் யார் செய்தால் என்ன இருக்கு சக்திக்கு நல்லபடியா ஆபரேஷன் நடக்கணும் என கூறுகிறார். பிறகு விக்ரமும் ஓகே எனக்கு ஒரு பொறுப்பை கணேசனிடம் ஒப்படைக்கிறார். எவ்வளவு சீக்கிரம் விழுப்புரத்தில் இருந்து இதயத்தை சென்னைக்கு கொண்டு வருவது என்ன செய்வது என கலந்து பேசிவிட்டு தெரியப்படுத்துமாறு கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.