Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்ணம்மாவால் கடுப்பான வெண்பா.. கண்ணம்மாவிற்கு போன் செய்த ஹேமா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi-kannamma serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ரோஹித் வெண்பாவை அழைத்துக்கொண்டு விக்ரம் மருத்துவமனைக்கு வந்து இருந்த நிலையில் அவர் கண்ணம்மாவிடம் பேசும் போது வெண்பாவை அழைத்து அறிமுகப்படுத்த நீங்க கல்யாணம் பண்ணிட்டு பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்தி வெறுப்பேற்றி இருக்கிறார்.

பின்னர் ஒரு நிமிஷம் எங்க டாக்டரை கூப்பிடுறேன் என பாரதி அழைக்க செல்ல வெண்பா அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை எங்களுக்கு நேரம் ஆயிடுச்சு நாங்கள் கிளம்பறோம் என பரபரக்கிறார். ஆனால் கண்ணம்மா 5 நிமிஷம் என ரோகித் இடம் கூறி அவர்களை காத்திருக்க வைத்து பாரதியை அழைத்து வருகிறார்.

ரோட்டில் அடிபட்டவரை ஒரு ஜோடி மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்திருக்கிறார்கள் அவர்களை பாராட்ட வேண்டும் வாருங்கள் என கூப்பிடுகிறார். பாரதியில் சரி என கீழே வந்து நிற்க வெண்பாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ரோஹித்தை அறிமுகம் செய்து வைத்து பிறகு வெண்பா யார் என்பதை நீங்களே சொல்லுங்க என ரோஹித்தை சொல்ல வைக்க அவர் என்னுடைய வருங்கால மனைவி எனக் கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட பாரதி அப்படியே திகைத்துப் போய் நிற்க வெண்பா கடுப்பாகி அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார்.

பிறகு ரோஹித் டாக்டர் பாரதி நீங்க தானா என கேட்டு வெண்பா உங்களத்தான் காதலிச்சா என கூறுகிறார். பிறகு இனி அடிக்கடி சந்திக்கலாம் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

வீட்டுக்கு போன வெண்பா தன்னுடைய அம்மாவிடம் கடுப்பாகி சத்தம் போடுகிறார். என்ன பண்ணான் தெரியுமா எனக்கு இரிட்டேட்டா இருக்கு என கூச்சலிட அவன் வரட்டும் நான் கேள்வி கேட்பேன் என கூறுகிறார். பிறகு ரோஹித் வந்ததும் என்ன நடந்துச்சி என கேட்க நடந்த விஷயத்தைச் சொல்ல சூப்பர் மாப்பிள என பாராட்டுகிறார். காரா முக்கியம் ஒரு உயிர்தான் முக்கியம் என கூறுகிறார். இருவரும் மாறி மாறி தெய்வ அத்தை தெய்வ மாப்பிள்ளை என புகழ்ந்து கொள்ள வெண்பா கடுப்பாகி மேலே சென்று விடுகிறார். அதன் பின்னர் பாரதியை மருத்துவமனையில் சந்தித்ததாகவும் கூடிய விரைவில் வெண்பாவை ஐ லவ் யூ ரோஹித் என சொல்ல வைக்கிறேன் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் ஹேமா பாரதி வீட்டுக்கு வராததால் அவருக்கு போன் போட பாரதி கட் செய்துவிடுகிறார். பிறகு கண்ணம்மாவுக்கு போன் செய்து டாடி போனை எடுக்கவே மாட்டேங்கிறாய், வீட்டுக்கு வர மாட்டேங்கறார். என் மேல என்ன கோபம் என்று தெரியல டாடிய நல்லா பாத்துக்கங்க சமையல் அம்மா என கூறுகிறார். சரி நான் என்னன்னு பார்க்கிறேன் என சொல்லி கண்ணம்மா போனை வைக்கிறார். இந்த மனுஷனுக்கு என்னாச்சு குழந்தைகிட்ட எதுக்கு இப்படி நடந்துக்கணும் என கண்ணம்மா யோசிக்க இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

bharathi-kannamma serial episode-update
bharathi-kannamma serial episode-update